• Apr 26 2024

வவுனியாவில் இடம்பெற்ற 75ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்!

Sharmi / Feb 4th 2023, 11:52 am
image

Advertisement

வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04) காலை 8.30 மணியளவில் இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத் சந்திர தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தேசிய கொடியை பிரதம விருந்தினர் ஏற்றி வைத்ததனை தொடர்ந்து சிங்களம் மற்றும் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் கலந்து கொண்டதுடன், சர்வமத தலைவர்கள், வன்னி பிராந்திய படைகளின் பிரதானி, விமானப்படை, சிவில் பாதுகாப்புப்படைகளின் பிரதானிகள், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டதுடன் அணிவகுப்பும் இடம்பெற்றிருந்தது.

வவுனியாவில் இடம்பெற்ற 75ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04) காலை 8.30 மணியளவில் இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத் சந்திர தலைமையில் இடம்பெற்றது.இதன்போது தேசிய கொடியை பிரதம விருந்தினர் ஏற்றி வைத்ததனை தொடர்ந்து சிங்களம் மற்றும் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் கலந்து கொண்டதுடன், சர்வமத தலைவர்கள், வன்னி பிராந்திய படைகளின் பிரதானி, விமானப்படை, சிவில் பாதுகாப்புப்படைகளின் பிரதானிகள், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டதுடன் அணிவகுப்பும் இடம்பெற்றிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement