• Apr 23 2024

சிங்கள தேசத்தின் சுதந்திர தினம் தமிழினத்தின் கரிநாள்: மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!

Sharmi / Feb 4th 2023, 11:40 am
image

Advertisement

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற வருகின்ற நிலையில் இன்றையதினம் சனிக்கிழமை(04) மன்னார் மாவட்டத்தில் சுதந்திர தினத்திற்கு எதிரான கரிநாள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ் சிவகரன் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம் இடம் பெற்ற மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது

குறித்த போராட்டத்தில் அருட்தந்தையர்கள்,இளைஞர்கள்,காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,தமிழ் உணர்வாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு நிறக்கொடிகளை ஏந்தியவாறு கைகளை சங்கிலியாள் கட்டி ,வாய் மற்றும் மூக்குகளை கறுப்பு துணிகளால் மூடிய படி பல்வேறு வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளுடன் சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக 75 ஆண்டாகியும் எமது அடிப்படை உரிமை நசுக்கப்படுகின்றது,சிங்களத்தின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்,பெளத்த தேசிய வாதமும் சிங்கள இனவாதமுமே எம்மை அடிமைப்படுத்துகின்றன என எழுதப்பட்ட பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்

போராட்டத்தின் இறுதியில் கைகளில் பதாதைகளையும் கறுப்பு கொடிகளையும் ஏந்தியவாறு  போராட்டகாரர்கள் மன்னார் பேரூந்து நிலைய வளாகம் முழுவதும் ஊர்வலமாக சென்றமை குறிப்பிடதக்கது.

சிங்கள தேசத்தின் சுதந்திர தினம் தமிழினத்தின் கரிநாள்: மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற வருகின்ற நிலையில் இன்றையதினம் சனிக்கிழமை(04) மன்னார் மாவட்டத்தில் சுதந்திர தினத்திற்கு எதிரான கரிநாள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுதமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ் சிவகரன் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம் இடம் பெற்ற மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததுகுறித்த போராட்டத்தில் அருட்தந்தையர்கள்,இளைஞர்கள்,காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,தமிழ் உணர்வாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு நிறக்கொடிகளை ஏந்தியவாறு கைகளை சங்கிலியாள் கட்டி ,வாய் மற்றும் மூக்குகளை கறுப்பு துணிகளால் மூடிய படி பல்வேறு வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளுடன் சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறிப்பாக 75 ஆண்டாகியும் எமது அடிப்படை உரிமை நசுக்கப்படுகின்றது,சிங்களத்தின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்,பெளத்த தேசிய வாதமும் சிங்கள இனவாதமுமே எம்மை அடிமைப்படுத்துகின்றன என எழுதப்பட்ட பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்போராட்டத்தின் இறுதியில் கைகளில் பதாதைகளையும் கறுப்பு கொடிகளையும் ஏந்தியவாறு  போராட்டகாரர்கள் மன்னார் பேரூந்து நிலைய வளாகம் முழுவதும் ஊர்வலமாக சென்றமை குறிப்பிடதக்கது.

Advertisement

Advertisement

Advertisement