யாழ்ப்பாணம் - நெல்லியடி நகர்ப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது கரவெட்டி பிரதேச சபை ஊழியர்கள் அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்களுடன் இணைந்து செயற்பட்டு தீ விபத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த தீ விபத்து காரணமாக சுமார் 20 இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கரவெட்டி பிரதேச சபையின் செயலாளரினால் உடனடியாக யாழ்.மாநகர சபை தீ அணைப்பு பிரிவுக்கு 4:42 மணிக்கு தகவல் வழங்கி ஸ்தலத்திற்கு தீயணைப்பு படையும் வருகை தந்து, தீயை அணைப்பதற்கு உதவியுள்ளது.
தீ அணைப்பின் போது உடனடியாக செயற்பட்ட பிரதேச சபையின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கரவெட்டி பிரதேசசபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நெல்லியடியில் அதிகாலையில் பாரிய தீ விபத்து யாழ்ப்பாணம் - நெல்லியடி நகர்ப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதன்போது கரவெட்டி பிரதேச சபை ஊழியர்கள் அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்களுடன் இணைந்து செயற்பட்டு தீ விபத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.இந்த தீ விபத்து காரணமாக சுமார் 20 இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரவெட்டி பிரதேச சபையின் செயலாளரினால் உடனடியாக யாழ்.மாநகர சபை தீ அணைப்பு பிரிவுக்கு 4:42 மணிக்கு தகவல் வழங்கி ஸ்தலத்திற்கு தீயணைப்பு படையும் வருகை தந்து, தீயை அணைப்பதற்கு உதவியுள்ளது.தீ அணைப்பின் போது உடனடியாக செயற்பட்ட பிரதேச சபையின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கரவெட்டி பிரதேசசபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.