• May 08 2024

புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம்பெற்ற 75வது சுதந்திர தினம்!

Sharmi / Feb 4th 2023, 3:50 pm
image

Advertisement

இலங்கையின் 75வது சுதந்திர தினம் இன்று புத்தளம் கொழும்பு முகத்திடலில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.எஸ் டி ஹேரத் தலைமையில் இடம்பெற்றதுடன், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல்மாயாதுன்ன புத்தளம் நகரசபைத் தவிசாளர் எம்.எஸ்.எம் ரபீக் கலந்து கொண்டனர். 

அத்துடன் சர்வமதத் தலைவர்கள் பொலிஸார் இராணவத்தினர் கடற்படையினர் விமானப்படையினர் கலந்து கொண்டதோடு அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த சுதந்திர தின நிகழ்வு 8 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து 8.15 மணியளவில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.

இதனையடுத்து 8.30 மணியளவில் புத்தளம் ஷாந்த மரியா பாடசாலை மாணவர்களினால் தேசியக் கீதம் இசைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு கலாச்சார நிகழ்வுகளும் பாடசாலை மாணவர்களினால் அரங்கேற்றப்பட்டு சுதந்திர தின நிகழ்வை அலங்கரித்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.

75 வது சுதந்திர தின நிகழ்வைக் கண்டு கழிப்பதற்கு பெருந்திரளான மக்கள் வருகைத் தந்திருந்தனர்.

புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம்பெற்ற 75வது சுதந்திர தினம் இலங்கையின் 75வது சுதந்திர தினம் இன்று புத்தளம் கொழும்பு முகத்திடலில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.எஸ் டி ஹேரத் தலைமையில் இடம்பெற்றதுடன், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல்மாயாதுன்ன புத்தளம் நகரசபைத் தவிசாளர் எம்.எஸ்.எம் ரபீக் கலந்து கொண்டனர். அத்துடன் சர்வமதத் தலைவர்கள் பொலிஸார் இராணவத்தினர் கடற்படையினர் விமானப்படையினர் கலந்து கொண்டதோடு அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.குறித்த சுதந்திர தின நிகழ்வு 8 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து 8.15 மணியளவில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். இதனையடுத்து 8.30 மணியளவில் புத்தளம் ஷாந்த மரியா பாடசாலை மாணவர்களினால் தேசியக் கீதம் இசைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து பல்வேறு கலாச்சார நிகழ்வுகளும் பாடசாலை மாணவர்களினால் அரங்கேற்றப்பட்டு சுதந்திர தின நிகழ்வை அலங்கரித்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.75 வது சுதந்திர தின நிகழ்வைக் கண்டு கழிப்பதற்கு பெருந்திரளான மக்கள் வருகைத் தந்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement