• Mar 03 2025

83 வயதான பெண்ணின் செயலால் அதிர்ச்சி - கொழும்பில் அதிரடியாக கைது

Chithra / Mar 3rd 2025, 11:23 am
image

 

கொழும்பில் காணி மோசடியில் ஈடுபட்ட 83 வயதான பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டியில் மற்றொரு நபருக்கு சொந்தமான காணியை, போலி ஆவணங்களை பயன்படுத்தி 50 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்த  பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறையின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு 2021 ஆம் ஆண்டு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைத்திருந்தது.

இந்த முறைப்பாட்டை தொடர்ந்து நடத்தப்பட்ட நீண்ட விசாரணையைத் தொடர்ந்து, பத்தரமுல்ல பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்ல வளாகத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

83 வயதான பெண்ணின் செயலால் அதிர்ச்சி - கொழும்பில் அதிரடியாக கைது  கொழும்பில் காணி மோசடியில் ஈடுபட்ட 83 வயதான பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கொள்ளுப்பிட்டியில் மற்றொரு நபருக்கு சொந்தமான காணியை, போலி ஆவணங்களை பயன்படுத்தி 50 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்த  பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப் புலனாய்வுத் துறையின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு 2021 ஆம் ஆண்டு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைத்திருந்தது.இந்த முறைப்பாட்டை தொடர்ந்து நடத்தப்பட்ட நீண்ட விசாரணையைத் தொடர்ந்து, பத்தரமுல்ல பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்ல வளாகத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement