• Jan 15 2025

4 வயது சிறுவனுக்கு எமனான சவர்க்காரம்! யாழில் துயர சம்பவம்

Chithra / Dec 6th 2024, 7:25 am
image


யாழ். இருபாலை பகுதியில் சவர்க்காரத்தில் கால் வழுக்கியதில் சிறுவன் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 4 வயதுடைய நிரோசன் விமாத்  என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 23ஆம் திகதி மேற்படி சிறுவன் அயல் வீட்டுச் சிறுவனுடன் விளையாடிவிட்டு வாளியைக்கொண்டு கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கை கழுவியுள்ளார். 

இதன்போது சவர்க்காரம் கீழே வீழ்ந்த  நிலையில் சவர்க்காரத்தின் மீது கால் மிதிபட்டதில் வழுக்கி கிணற்றினுள் வீழ்ந்துள்ளார்.

இந்நிலையில், மேற்படி சிறுவன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று   காலை உயிரிழந்துள்ளார்.

அவனது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

4 வயது சிறுவனுக்கு எமனான சவர்க்காரம் யாழில் துயர சம்பவம் யாழ். இருபாலை பகுதியில் சவர்க்காரத்தில் கால் வழுக்கியதில் சிறுவன் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 4 வயதுடைய நிரோசன் விமாத்  என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கடந்த 23ஆம் திகதி மேற்படி சிறுவன் அயல் வீட்டுச் சிறுவனுடன் விளையாடிவிட்டு வாளியைக்கொண்டு கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கை கழுவியுள்ளார். இதன்போது சவர்க்காரம் கீழே வீழ்ந்த  நிலையில் சவர்க்காரத்தின் மீது கால் மிதிபட்டதில் வழுக்கி கிணற்றினுள் வீழ்ந்துள்ளார்.இந்நிலையில், மேற்படி சிறுவன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று   காலை உயிரிழந்துள்ளார்.அவனது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement