• May 09 2024

தண்ணீருக்கே தண்ணி காட்டி சாதனை படைத்த சிறுவன்...! samugammedia

Tamil nila / May 19th 2023, 4:04 pm
image

Advertisement

சிறுவன் ஒருவன் தண்ணீருக்குள் மிதந்தபடியே 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

கோவை சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்தான ராஜா- ராஜேஸ்வரி தம்பதியினரின் மகனான 11 வயதுடைய ராஜமுனீஸ்வர் என்பவரே இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆவர். 

ராஜமுனீஸ்வர் தனியார் பள்ளியில் 6 ஆம்  வகுப்பு படித்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள சிலம்பம் பள்ளியில் சேர்ந்துள்ளதுள்ளார். அதே பள்ளியில் நீச்சல் வகுப்பும் இருந்துள்ளது.



ராஜமுனீஸ்வர் நீச்சல் மீதும் ஆர்வம் காட்டுவதை அறிந்த அவரது பயிற்சியாளர், அவருக்கு நீச்சல் பயிற்சியும் அளித்துள்ளார். 

நீச்சல் கற்றுக் கொண்ட மாணவர் சிலம்பத்தை நீரில் இருந்தபடியே சுற்றியுள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் வியப்படைந்ததோடு இதனை பயிற்சியாளருக்கும் தெரிவித்துள்ளனர்.

அவரது அறிவுறையின் பேரில் புது வித சாதனையை படைப்பதற்கு மாணவர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். 

அதன்படி மாணவர் ராஜமுனீஸ்வர் இரண்டு மணி நேரம் இடைவிடாது நீச்சல் குளத்தில் மிதந்தபடியே, நீச்சல் யுக்திகளை கையாண்டு ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பங்களை சுழற்றி சாதனை புரிந்துள்ளார்.

அதனால், மாணவனின் இந்த சாதனையை அங்கீகரித்து நோபல் வோர்ல்டு ரெக்கார் அச்சீவர் புத்தகத்தில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீருக்கே தண்ணி காட்டி சாதனை படைத்த சிறுவன். samugammedia சிறுவன் ஒருவன் தண்ணீருக்குள் மிதந்தபடியே 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.கோவை சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்தான ராஜா- ராஜேஸ்வரி தம்பதியினரின் மகனான 11 வயதுடைய ராஜமுனீஸ்வர் என்பவரே இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆவர். ராஜமுனீஸ்வர் தனியார் பள்ளியில் 6 ஆம்  வகுப்பு படித்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள சிலம்பம் பள்ளியில் சேர்ந்துள்ளதுள்ளார். அதே பள்ளியில் நீச்சல் வகுப்பும் இருந்துள்ளது.ராஜமுனீஸ்வர் நீச்சல் மீதும் ஆர்வம் காட்டுவதை அறிந்த அவரது பயிற்சியாளர், அவருக்கு நீச்சல் பயிற்சியும் அளித்துள்ளார். நீச்சல் கற்றுக் கொண்ட மாணவர் சிலம்பத்தை நீரில் இருந்தபடியே சுற்றியுள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் வியப்படைந்ததோடு இதனை பயிற்சியாளருக்கும் தெரிவித்துள்ளனர்.அவரது அறிவுறையின் பேரில் புது வித சாதனையை படைப்பதற்கு மாணவர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதன்படி மாணவர் ராஜமுனீஸ்வர் இரண்டு மணி நேரம் இடைவிடாது நீச்சல் குளத்தில் மிதந்தபடியே, நீச்சல் யுக்திகளை கையாண்டு ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பங்களை சுழற்றி சாதனை புரிந்துள்ளார்.அதனால், மாணவனின் இந்த சாதனையை அங்கீகரித்து நோபல் வோர்ல்டு ரெக்கார் அச்சீவர் புத்தகத்தில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement