• May 17 2024

கொழும்பில் கடைக்குள் புகுந்த கார் - பொலிஸார் வெளியிட்ட தகவல்

harsha / Dec 11th 2022, 8:01 pm
image

Advertisement

கொள்ளுப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற  கோர விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கொள்ளுப்பிட்டி பொலிஸார், விபத்தை தொடர்ந்து பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற   காரின் சாரதியை இன்னும் கைது செய்யவில்லை என தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், விபத்தை ஏற்படுத்திய காரில் பயணித்த பெண் ஒருவரை தாக்கிய நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் பயணியை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் வீதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பெண்களை ஏற்கனவே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயணியை தாக்கிய மற்றொரு பெண்ணை கைது செய்ய பொலிஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர்

சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இது  பலர் ஒரு பெண்ணை தாக்குவதைக் காட்டியது.இதனை அடுத்தே குறித்த நடவடிக்கையினை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.

மேலும் கொழும்பு ஆர்.ஏ.டி.மெல் மாவத்தையில் உள்ள இரவு விடுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று முச்சக்கரவண்டியின் பின்னால் இருந்து மோதியதில் 58 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

கொழும்பில் கடைக்குள் புகுந்த கார் - பொலிஸார் வெளியிட்ட தகவல் கொள்ளுப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற  கோர விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கொள்ளுப்பிட்டி பொலிஸார், விபத்தை தொடர்ந்து பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற   காரின் சாரதியை இன்னும் கைது செய்யவில்லை என தெரிவித்தனர்.எவ்வாறாயினும், விபத்தை ஏற்படுத்திய காரில் பயணித்த பெண் ஒருவரை தாக்கிய நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பெண் பயணியை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் வீதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பெண்களை ஏற்கனவே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பயணியை தாக்கிய மற்றொரு பெண்ணை கைது செய்ய பொலிஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர்சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இது  பலர் ஒரு பெண்ணை தாக்குவதைக் காட்டியது.இதனை அடுத்தே குறித்த நடவடிக்கையினை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.மேலும் கொழும்பு ஆர்.ஏ.டி.மெல் மாவத்தையில் உள்ள இரவு விடுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று முச்சக்கரவண்டியின் பின்னால் இருந்து மோதியதில் 58 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

Advertisement

Advertisement

Advertisement