• Sep 05 2025

பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று தீப்பற்றி எரிந்த கார்; கிளிநொச்சியில் பதற்றம்

Chithra / Sep 5th 2025, 1:59 pm
image

கிளிநொச்சி ஏ-9 வீதியால் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று இன்றையதினம்  திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. 

இதுகுறித்து மேலும் தெரிய வருகையில்,

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகாமையில் பயணித்துக் கொண்டிருந்த காரே இவ்வாறு திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.  

இந்நிலையில் காரை விட்டு சாரதி இறங்கியதால் அவர் தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்தவர்கள் தீயணைப்பு பிரிவுக்கு அழைப்பு மேற்கொண்டபோதும் அங்கு ஊழியர்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து கிளிநொச்சி பொலிசாருக்கு தகவல் வழங்கிய நிலையிலும் பொலிசார், தீயை அணைத்து பின்னரே அந்த பகுதிக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே இவ்வாறான விபத்துகளோ அல்லது வேறு சம்பவங்களோ இடம்பெறும் பட்சத்தில் பொலிசார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் உரிய நேரத்திற்கு சம்பவ இடத்திற்கு சென்று தமது கடமையை சரிவர ஆற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று தீப்பற்றி எரிந்த கார்; கிளிநொச்சியில் பதற்றம் கிளிநொச்சி ஏ-9 வீதியால் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று இன்றையதினம்  திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. இதுகுறித்து மேலும் தெரிய வருகையில்,கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகாமையில் பயணித்துக் கொண்டிருந்த காரே இவ்வாறு திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.  இந்நிலையில் காரை விட்டு சாரதி இறங்கியதால் அவர் தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளார்.பின்னர் அங்கிருந்தவர்கள் தீயணைப்பு பிரிவுக்கு அழைப்பு மேற்கொண்டபோதும் அங்கு ஊழியர்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிளிநொச்சி பொலிசாருக்கு தகவல் வழங்கிய நிலையிலும் பொலிசார், தீயை அணைத்து பின்னரே அந்த பகுதிக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.எனவே இவ்வாறான விபத்துகளோ அல்லது வேறு சம்பவங்களோ இடம்பெறும் பட்சத்தில் பொலிசார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் உரிய நேரத்திற்கு சம்பவ இடத்திற்கு சென்று தமது கடமையை சரிவர ஆற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement