• Nov 26 2024

மனித உரிமை கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு...!

Sharmi / Jun 30th 2024, 6:01 pm
image

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் மனித உரிமைகள் டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றையதினம்(30) காலை யாழ்.இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் பணிப்பாளர் திருமதி அம்பிகா ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு, பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சொர்ணலிங்கம் தியாகேந்திரன் மற்றும்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் திருமதி துஷானி சயந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேவேளை, கௌரவ விருந்தினராக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் கனநாதன் ரஜீவனும்  கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வில், சட்ட மற்றும் மனித உரிமை கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





மனித உரிமை கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு. சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் மனித உரிமைகள் டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றையதினம்(30) காலை யாழ்.இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் பணிப்பாளர் திருமதி அம்பிகா ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு, பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சொர்ணலிங்கம் தியாகேந்திரன் மற்றும்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் திருமதி துஷானி சயந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.அதேவேளை, கௌரவ விருந்தினராக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் கனநாதன் ரஜீவனும்  கலந்து கொண்டார்.குறித்த நிகழ்வில், சட்ட மற்றும் மனித உரிமை கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement