• Nov 23 2024

மொழிக் கல்விப் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தோருக்கு சான்றிதல் வழங்கும் நிகழ்வு !

Tharmini / Nov 5th 2024, 9:41 am
image

தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வடமாகானத்தில் அரச உத்தியோகஸ்தர்களுக்காக மேற்கொண்ட,

150 மணித்தியால பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதல் வழங்கும் நிகழ்வு மற்றும் கலை நிகழ்வு மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் சிரேஸ்ர மொழிப்பாட தேசிய வளவாளர் E. சாகரிகா பிகிறாடோ தலைமையில் இடம்பெற்றது.

2020 ஆண்டு அரச கரும மொழி அமைச்சினால் வெளியிடப்பட்ட 18 ஆம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக அரச உத்தியோத்தர்களின் மொழி புலமையை விருத்தி செய்யும் முகமாக மேற்கொள்ளப்பட்ட பயிற்சி நெறியை பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கு மேற்படி சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது

குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, தேசிய மொழிக்கல்வி மற்றம் பயிற்சி நிறுவனத்தின் தேசிய இணைப்பாளர் திரு டிலான் ரணசிங்க அவர்களும், தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் திரு அஸ்வின் பாலக்கிருஷ்ணன் அவர்களும், மற்றும் இரண்டாம் மொழிபாட வளவாளர் சுபாஜினி விநாயகமூர்த்தி அவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர் 

குறித்த நிகழ்வில் சிங்கள கற்கை நெறிகளை பூர்த்தி செய்த பயிலுனர்களால் பல்வேறு கலை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்றது அதே நேரம் புதிய சிங்கள பாடநெறியானது (Zoom தொழில் நுட்பம், மற்றும் நேரடி வகுப்பு) ஆரம்பிக்க உள்ள நிலையில் பயிற்சி நெறியை தொடர விரும்புவோர் 0776355521 தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




மொழிக் கல்விப் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தோருக்கு சான்றிதல் வழங்கும் நிகழ்வு தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வடமாகானத்தில் அரச உத்தியோகஸ்தர்களுக்காக மேற்கொண்ட, 150 மணித்தியால பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதல் வழங்கும் நிகழ்வு மற்றும் கலை நிகழ்வு மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் சிரேஸ்ர மொழிப்பாட தேசிய வளவாளர் E. சாகரிகா பிகிறாடோ தலைமையில் இடம்பெற்றது.2020 ஆண்டு அரச கரும மொழி அமைச்சினால் வெளியிடப்பட்ட 18 ஆம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக அரச உத்தியோத்தர்களின் மொழி புலமையை விருத்தி செய்யும் முகமாக மேற்கொள்ளப்பட்ட பயிற்சி நெறியை பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கு மேற்படி சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுகுறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, தேசிய மொழிக்கல்வி மற்றம் பயிற்சி நிறுவனத்தின் தேசிய இணைப்பாளர் திரு டிலான் ரணசிங்க அவர்களும், தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் திரு அஸ்வின் பாலக்கிருஷ்ணன் அவர்களும், மற்றும் இரண்டாம் மொழிபாட வளவாளர் சுபாஜினி விநாயகமூர்த்தி அவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர் குறித்த நிகழ்வில் சிங்கள கற்கை நெறிகளை பூர்த்தி செய்த பயிலுனர்களால் பல்வேறு கலை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்றது அதே நேரம் புதிய சிங்கள பாடநெறியானது (Zoom தொழில் நுட்பம், மற்றும் நேரடி வகுப்பு) ஆரம்பிக்க உள்ள நிலையில் பயிற்சி நெறியை தொடர விரும்புவோர் 0776355521 தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement