• Apr 27 2024

ஐ.பி.எல் ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு

harsha / Dec 15th 2022, 10:37 am
image

Advertisement

இம்மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கட் போட்டிக்கான வீரர்கள் 405 பேர் கொண்ட இறுதிப் பட்டியலில் 10 இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஐ.பி.எல் 991 வீரர்களின் முதற்கட்ட பட்டியல் ஏலத்திற்காக முதலில் தயாரிக்கப்பட்டது, ஆனால் பின்னர் அது 405 ஆக குறைக்கப்பட்டது. இறுதிப் பட்டியலில் 273 இந்தியர்களும், 132 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள்.

இலங்கை அணிக்காக ஒருநாள் மற்றும் T20 அணித்தலைவர் தசுன் ஷானக, குசல் மெண்டிஸ், துஷ்மந்த சமிர, பதும் நிஷங்க, சரித் அசங்க, சாமிக்க கருணாரத்ன, லஹிரு குமார, டில்ஷான் மதுஷங்க, தனஞ்சய டி சில்வா மற்றும் துனித் வெல்லாலகே ஆகிய இலங்கை வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

ஐ.பி.எல் ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு இம்மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கட் போட்டிக்கான வீரர்கள் 405 பேர் கொண்ட இறுதிப் பட்டியலில் 10 இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.ஐ.பி.எல் 991 வீரர்களின் முதற்கட்ட பட்டியல் ஏலத்திற்காக முதலில் தயாரிக்கப்பட்டது, ஆனால் பின்னர் அது 405 ஆக குறைக்கப்பட்டது. இறுதிப் பட்டியலில் 273 இந்தியர்களும், 132 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள்.இலங்கை அணிக்காக ஒருநாள் மற்றும் T20 அணித்தலைவர் தசுன் ஷானக, குசல் மெண்டிஸ், துஷ்மந்த சமிர, பதும் நிஷங்க, சரித் அசங்க, சாமிக்க கருணாரத்ன, லஹிரு குமார, டில்ஷான் மதுஷங்க, தனஞ்சய டி சில்வா மற்றும் துனித் வெல்லாலகே ஆகிய இலங்கை வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement