• Jun 13 2024

மாடுகளை மேய்ப்பதற்காக சென்ற இளைஞனை இழுத்து சென்ற முதலை..!

Tamil nila / Dec 24th 2022, 9:34 am
image

Advertisement

மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கல்முனை பகுதியை இணைக்கின்ற கிட்டங்கி வாவி பகுதியில் வெள்ளிக்கிழமை(23) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.



இதன் போது   மாடுகள் கிட்டங்கி வாவியில் இறங்கி நிற்பதாக நண்பன் தெரிவித்ததற்கமைய குறித்த இளைஞன் மாடுகளை கரையேற்றுவதற்காக வாவியினுள் இறங்கிய நிலையில்  முதலை பிடித்து இழுத்து சென்றுள்ளது.


 

இவ்வாறு முதலை பிடியினால் காணாமல் போனவர் சேனைக்குடியிருப்பு 1 பிரிவு 157 விக்னேஸ்வரன் வீதியை சேர்ந்த சுகிர் பிரதாஸ் (வயது-30) என்பவராவார்.



சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்படுவதுடன் பொதுமக்களுடன் கடற்படையினர் பொலிஸார் இணைந்து தேடுதலை  மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி  பகுதியில்   முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறதுடன்  முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் அறிவுறுத்துதல்கள்  எச்சரிக்கை பலகைகள் உரிய இடங்களில் இதுவரையும் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. முதலை அபாயம் தெரியாமல்  இப்பகுதியில்  பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியம் உள்ளது. இதை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

மாடுகளை மேய்ப்பதற்காக சென்ற இளைஞனை இழுத்து சென்ற முதலை. மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கல்முனை பகுதியை இணைக்கின்ற கிட்டங்கி வாவி பகுதியில் வெள்ளிக்கிழமை(23) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதன் போது   மாடுகள் கிட்டங்கி வாவியில் இறங்கி நிற்பதாக நண்பன் தெரிவித்ததற்கமைய குறித்த இளைஞன் மாடுகளை கரையேற்றுவதற்காக வாவியினுள் இறங்கிய நிலையில்  முதலை பிடித்து இழுத்து சென்றுள்ளது. இவ்வாறு முதலை பிடியினால் காணாமல் போனவர் சேனைக்குடியிருப்பு 1 பிரிவு 157 விக்னேஸ்வரன் வீதியை சேர்ந்த சுகிர் பிரதாஸ் (வயது-30) என்பவராவார்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்படுவதுடன் பொதுமக்களுடன் கடற்படையினர் பொலிஸார் இணைந்து தேடுதலை  மேற்கொண்டு வருகின்றனர்.மேற்படி  பகுதியில்   முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறதுடன்  முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் அறிவுறுத்துதல்கள்  எச்சரிக்கை பலகைகள் உரிய இடங்களில் இதுவரையும் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. முதலை அபாயம் தெரியாமல்  இப்பகுதியில்  பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியம் உள்ளது. இதை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement