அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கடந்த 2018 ஆம் ஆண்டில், ஹண்டர் பைடன் ஒரு துப்பாக்கியை வாங்கினார். அமெரிக்காவில் துப்பாக்கி வாங்கும் போது, ஒரு நபர் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். போதைப்பொருள் பயன்பாடு குறித்த கேள்விக்கு ஹண்டர் பைடன் “இல்லை” என்று பதிலளித்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் அவர் அந்த நேரத்தில் போதைபொருட்களை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து செப்டம்பர் 2023 இல், ஹண்டர் பைடன் மீது இந்த துப்பாக்கி வாங்குவது தொடர்பான மூன்று கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதில் அவரது போதைப்பொருள் பயன்பாடு குறித்து படிவத்தில் பொய் கூறியது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துபவராக இருந்தபோது சட்டவிரோதமாக 11 நாட்கள் துப்பாக்கியை வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது.
ஹண்டரின் முன்னாள் மனைவி, முன்னாள் காதலி மற்றும் அவரின் மைத்துனர் மற்றும் பிற அரசு தரப்பு சாட்சிகளை வைத்து இவரது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஹண்டர் பைடனுக்கு முதல் குற்றச்சாட்டுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், இரண்டாவது குற்றத்திற்கு ஐந்து ஆண்டுகளும், மூன்றாவது குற்றச்சாட்டுக்கு மேலும் 10 ஆண்டுகளும் சிறைத்தண்டனை என மொத்தம் 25 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தண்டன விவரங்கள் அடுத்த 120 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் மகனுக்கு 25 ஆண்டுகள் சிறை. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த 2018 ஆம் ஆண்டில், ஹண்டர் பைடன் ஒரு துப்பாக்கியை வாங்கினார். அமெரிக்காவில் துப்பாக்கி வாங்கும் போது, ஒரு நபர் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். போதைப்பொருள் பயன்பாடு குறித்த கேள்விக்கு ஹண்டர் பைடன் “இல்லை” என்று பதிலளித்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் அவர் அந்த நேரத்தில் போதைபொருட்களை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து செப்டம்பர் 2023 இல், ஹண்டர் பைடன் மீது இந்த துப்பாக்கி வாங்குவது தொடர்பான மூன்று கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதில் அவரது போதைப்பொருள் பயன்பாடு குறித்து படிவத்தில் பொய் கூறியது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துபவராக இருந்தபோது சட்டவிரோதமாக 11 நாட்கள் துப்பாக்கியை வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது.ஹண்டரின் முன்னாள் மனைவி, முன்னாள் காதலி மற்றும் அவரின் மைத்துனர் மற்றும் பிற அரசு தரப்பு சாட்சிகளை வைத்து இவரது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில், ஹண்டர் பைடனுக்கு முதல் குற்றச்சாட்டுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், இரண்டாவது குற்றத்திற்கு ஐந்து ஆண்டுகளும், மூன்றாவது குற்றச்சாட்டுக்கு மேலும் 10 ஆண்டுகளும் சிறைத்தண்டனை என மொத்தம் 25 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கின் தண்டன விவரங்கள் அடுத்த 120 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.