• May 17 2024

வைரலாகும் CSK அணியின் துணிவு பட டுவிட்!

crownson / Dec 24th 2022, 9:34 am
image

Advertisement

IPL 16வது சீசனுக்கான மினி IPL ஏலம் கொச்சியில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது.

இந்த ஏலத்தில் 405 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர் இதில், 273 இந்திய வீரர்களும், 132 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

405 வீரர்களில் இருந்து 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 87 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதால் இந்த ஏலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

ஏலம் தொடங்கியதும் முதல் வீரராக ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டனான வில்லியம்சன் அறிவிக்கப்பட்டார்.

இவருக்கு ரூ. 2 கோடி அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அவரை வாங்க அணிகள் அதிகம் ஆர்வம் காட்டவிலை.

அவரை கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணி 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

அடுத்த வீரராக இங்கிலாந்து அணியின் ஹாரி பரூக்கை ஏலத்தில் எடுக்க போட்டி நிலவியது.

ஹாரியை ஏலத்தில் எடுக்க ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் போட்டியிட்டன.

இறுதியில் ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஹேரியை ஏலத்தில் எடுத்தது.

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரும் சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருந்த சாம் கரனுன்கு இந்த ஏலத்தில் மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

நடந்து முடிந்த T20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற முக்கிய வீரராக இருந்தவர் சாம் கரன்.

T20 உலகக்கோப்பை தொடரில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்திய சாம் கரன் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

சாம் கரனை ஏலத்தில் எடுக்க முதலில் மும்பை இந்தியன்ஸ் - CSK அணிகள் போட்டியிட்டன.

ஏலம் 14 கோடிக்கு மேல் சென்றதும் CSK விலகியது. பின் பஞ்சாப் அணியும் மும்பையும் போட்டியின.

இறுதியாக சாம் கரனை பஞ்சாப் அணி ரூ.18.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை சாம் கரன் படைத்துள்ளார்.

நடப்பு IPL தொடரில் சாம் கரனுக்கு அடுத்தப்படியாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரினை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.17.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இவர்கள் இருவருக்கும் அடுத்தப்படியாக பென் ஸ்டோக்ஸ் ரூ.16.25 கோடிக்கு ஏலம் போனார்.

அவரை ஏலத்தில் எடுத்ததுCSK

CSK அணிக்கு ரவீந்திர ஜடேஜா, மொயின் அலிக்கு அடுத்தப்படியாக சிறந்த ஆல் ரவுண்டராக பென் ஸ்டோக்ஸ் இடம் பெற்றுள்ளார்.

பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுத்த உடன் அவரை பாராட்டி CSK தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தது.

அதேபோல் CSK வீரரும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலியும் பென் ஸ்டோக்ஸ்க்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இதனை தனது ட்விட்டர் பகிர்ந்த CSK வலிமை அப்டேட்டுக்கு பிறகு துணிவு வாங்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளது.

மொயின் அலியிடம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோ வெளியாகி வைரலானதை தொடர்ந்து இந்த ட்வீட்டை CSK தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

நடிகர் அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

வைரலாகும் CSK அணியின் துணிவு பட டுவிட் IPL 16வது சீசனுக்கான மினி IPL ஏலம் கொச்சியில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஏலத்தில் 405 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர் இதில், 273 இந்திய வீரர்களும், 132 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.405 வீரர்களில் இருந்து 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 87 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதால் இந்த ஏலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.ஏலம் தொடங்கியதும் முதல் வீரராக ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டனான வில்லியம்சன் அறிவிக்கப்பட்டார். இவருக்கு ரூ. 2 கோடி அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அவரை வாங்க அணிகள் அதிகம் ஆர்வம் காட்டவிலை. அவரை கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணி 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.அடுத்த வீரராக இங்கிலாந்து அணியின் ஹாரி பரூக்கை ஏலத்தில் எடுக்க போட்டி நிலவியது. ஹாரியை ஏலத்தில் எடுக்க ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் போட்டியிட்டன. இறுதியில் ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஹேரியை ஏலத்தில் எடுத்தது.இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரும் சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருந்த சாம் கரனுன்கு இந்த ஏலத்தில் மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது. நடந்து முடிந்த T20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற முக்கிய வீரராக இருந்தவர் சாம் கரன்.T20 உலகக்கோப்பை தொடரில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்திய சாம் கரன் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.சாம் கரனை ஏலத்தில் எடுக்க முதலில் மும்பை இந்தியன்ஸ் - CSK அணிகள் போட்டியிட்டன. ஏலம் 14 கோடிக்கு மேல் சென்றதும் CSK விலகியது. பின் பஞ்சாப் அணியும் மும்பையும் போட்டியின. இறுதியாக சாம் கரனை பஞ்சாப் அணி ரூ.18.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை சாம் கரன் படைத்துள்ளார்.நடப்பு IPL தொடரில் சாம் கரனுக்கு அடுத்தப்படியாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரினை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.17.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இவர்கள் இருவருக்கும் அடுத்தப்படியாக பென் ஸ்டோக்ஸ் ரூ.16.25 கோடிக்கு ஏலம் போனார். அவரை ஏலத்தில் எடுத்ததுCSK CSK அணிக்கு ரவீந்திர ஜடேஜா, மொயின் அலிக்கு அடுத்தப்படியாக சிறந்த ஆல் ரவுண்டராக பென் ஸ்டோக்ஸ் இடம் பெற்றுள்ளார்.பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுத்த உடன் அவரை பாராட்டி CSK தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தது. அதேபோல் CSK வீரரும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலியும் பென் ஸ்டோக்ஸ்க்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.இதனை தனது ட்விட்டர் பகிர்ந்த CSK வலிமை அப்டேட்டுக்கு பிறகு துணிவு வாங்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளது. மொயின் அலியிடம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோ வெளியாகி வைரலானதை தொடர்ந்து இந்த ட்வீட்டை CSK தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. நடிகர் அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement

Advertisement

Advertisement