• May 03 2024

போதைப்பொருள் பாவிப்பவருக்கு திருமணம் செய்யமுடியாது; அதிரடி முடிவெடுத்த பள்ளிவாசல்!

Tamil nila / Dec 30th 2022, 2:12 pm
image

Advertisement

நபர் ஒருவரின் திருமணத்திற்கான சமய அங்கீகாரத்தை அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிராகரித்துள்ளது.


போதைப்பொருள் பாவனைக்கு உள்வாங்கப்பட்ட நபரின் திருமண அங்கீகாரத்தையே பள்ளிவாசல் நிராகரித்துள்ளது. சம்பவம் குறித்து தெரியவருகையில்,


அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் பிரதேசத்திற்குள் வசித்து வரும் நபர் ஒருவரின் திருமணத்தை நடாத்தி வைக்குமாறு ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.


குறித்த விண்ணப்பத்தை பரீசீலனைக்காக எடுத்துக் கொண்ட ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை குறித்த நபர் போதை பொருள் பாவனைக்கு உள்வாங்கப்பட்பட்டவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனவே திருமண சடங்கை நிறைவேற்றி வைப்பதை தவிர்த்துள்ளது.


அத்துடன் குறித்த விண்ணப்பத்தையும் பள்ளிவாசல்  நிராகரித்துள்ளது.


திருமணத்திற்கான மணமகனை போதைப் பொருள் புனர்வாழ்வு மையத்தில் அனுமதிப்பதுடன் அங்கிருந்து நற்சான்றிதழ் பத்திரம் பெற்று மீண்டும் பள்ளிவாசலில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் முக்கிய பேசு பொருளாக மாறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



போதைப்பொருள் பாவிப்பவருக்கு திருமணம் செய்யமுடியாது; அதிரடி முடிவெடுத்த பள்ளிவாசல் நபர் ஒருவரின் திருமணத்திற்கான சமய அங்கீகாரத்தை அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிராகரித்துள்ளது.போதைப்பொருள் பாவனைக்கு உள்வாங்கப்பட்ட நபரின் திருமண அங்கீகாரத்தையே பள்ளிவாசல் நிராகரித்துள்ளது. சம்பவம் குறித்து தெரியவருகையில்,அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் பிரதேசத்திற்குள் வசித்து வரும் நபர் ஒருவரின் திருமணத்தை நடாத்தி வைக்குமாறு ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.குறித்த விண்ணப்பத்தை பரீசீலனைக்காக எடுத்துக் கொண்ட ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை குறித்த நபர் போதை பொருள் பாவனைக்கு உள்வாங்கப்பட்பட்டவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனவே திருமண சடங்கை நிறைவேற்றி வைப்பதை தவிர்த்துள்ளது.அத்துடன் குறித்த விண்ணப்பத்தையும் பள்ளிவாசல்  நிராகரித்துள்ளது.திருமணத்திற்கான மணமகனை போதைப் பொருள் புனர்வாழ்வு மையத்தில் அனுமதிப்பதுடன் அங்கிருந்து நற்சான்றிதழ் பத்திரம் பெற்று மீண்டும் பள்ளிவாசலில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் முக்கிய பேசு பொருளாக மாறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement