• Jan 13 2026

மின்சாரம் தாக்கியதால் பறிபோன குடும்பஸ்தரின் உயிர்

Chithra / Jan 13th 2026, 7:52 am
image


நுவரெலியா - கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தவலந்தன்ன பகுதியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


ரம்பொடை 50 ஏக்கர் தோட்டத்தை சேர்த்த 34 வயதுடைய  இரண்டு பிள்ளைகளின் தந்தையான ராஜகோபால் தியாகன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


டித்வா புயலால் தவலந்தன்னை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வீடுகளின் திருந்தும் பணியில் ஈடுபட்டிருந்த போதே அவர் மின்சாரம் தாக்கி உள்ளாகியுள்ளனர்.


நேற்று (12) பிற்பகல் ஏணி ஒன்றை வைத்துக்கொண்டு இப்பணியில் ஈடுபட்ட இவர், குறித்த ஏணி மின் கம்பத்தில் மோதியதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


மின்சாரம் தாக்கியதால் பறிபோன குடும்பஸ்தரின் உயிர் நுவரெலியா - கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தவலந்தன்ன பகுதியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ரம்பொடை 50 ஏக்கர் தோட்டத்தை சேர்த்த 34 வயதுடைய  இரண்டு பிள்ளைகளின் தந்தையான ராஜகோபால் தியாகன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.டித்வா புயலால் தவலந்தன்னை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வீடுகளின் திருந்தும் பணியில் ஈடுபட்டிருந்த போதே அவர் மின்சாரம் தாக்கி உள்ளாகியுள்ளனர்.நேற்று (12) பிற்பகல் ஏணி ஒன்றை வைத்துக்கொண்டு இப்பணியில் ஈடுபட்ட இவர், குறித்த ஏணி மின் கம்பத்தில் மோதியதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement