குருநாகல் - மாஹோ சந்தி மற்றும் அநுராதபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையிலான புனரமைப்பு நடவடிக்கை காரணமாகக் குறித்த மார்க்கத்தின் ஊடான ரயில் சேவை இடைநிறுத்தப்படவுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, வடக்கு ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணிக்கும் ரயில்கள் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை மஹோ சந்தி வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும் அநுராதபுரம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான ரயில் சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, இந்திய அரசாங்கத்தினால் கிடைக்கப்பெற்ற 5 மில்லியன் அமெரிக்க டொலர் மானிய உதவிகள் மூலம், டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த ரயில் மார்க்கங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ் - கொழும்பு ரயில் சேவை குறித்து வெளியான அறிவிப்பு குருநாகல் - மாஹோ சந்தி மற்றும் அநுராதபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையிலான புனரமைப்பு நடவடிக்கை காரணமாகக் குறித்த மார்க்கத்தின் ஊடான ரயில் சேவை இடைநிறுத்தப்படவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, வடக்கு ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணிக்கும் ரயில்கள் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை மஹோ சந்தி வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் அநுராதபுரம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான ரயில் சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை, இந்திய அரசாங்கத்தினால் கிடைக்கப்பெற்ற 5 மில்லியன் அமெரிக்க டொலர் மானிய உதவிகள் மூலம், டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த ரயில் மார்க்கங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.