யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை பேணியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபை ஆளுகைக்கு உட்பட்ட தொண்டைமானாறு பகுதியில் டெங்கு நோய் தொடர்பான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது அந்த பகுதியில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய 10 ஆதன உரிமையாளர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறித்த நபர்கள் மன்றில் முன்னிலையாகினர்.
இதன்போது குறித்த 10 ஆதன உரிமையாளர்களும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவர்களுக்கு தலா 8 ஆயிரம் ரூபாய் வீதம் நீதிமன்றால் அபராதம் விதிக்கப்பட்டதுடன் எச்சிரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
யாழில் டெங்கு பரவும் வகையில் சூழலை பேணியவர்களுக்கு அபராதம் யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை பேணியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை ஆளுகைக்கு உட்பட்ட தொண்டைமானாறு பகுதியில் டெங்கு நோய் தொடர்பான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது அந்த பகுதியில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய 10 ஆதன உரிமையாளர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறித்த நபர்கள் மன்றில் முன்னிலையாகினர்.இதன்போது குறித்த 10 ஆதன உரிமையாளர்களும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவர்களுக்கு தலா 8 ஆயிரம் ரூபாய் வீதம் நீதிமன்றால் அபராதம் விதிக்கப்பட்டதுடன் எச்சிரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.