குருநாகலை - மெல்சிரிபுரவின் பன்சியகம பகுதியில் பௌத்த வன ஆசிரமமான உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் அறுந்து விழுந்ததில் படுகாயமடைந்த மற்றுமொரு பிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 24 ஆம் திகதி இரவு 9.00 மணியளவில் புனித தலத்தில் மத சடங்குகளை முடித்துவிட்டு தியான மண்டபத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்து நடந்தபோது கேபிள் காரில் 13 பிக்குகள் பயணித்துள்ள நிலையில், அதில் ஏழு பிக்குகள் முன்னதாக உயிரிழந்தனர்.
அவர்களில் மூவர் ருமேனியா, ரஷ்யா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு பிக்குகள் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின்போது கேபிள் காரில் இருந்து குதித்த இரண்டு பிக்குகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் மேலும் நான்கு பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 41 வயதுடைய மற்றுமொரு பௌத்த பிக்கு இன்று உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கேபிள் காரில் ஏற்றக் கூடிய அதிகூடிய எடையாக 500 கிலோகிராம் குறிப்பிடப்பட்டிருந்தபோதும் 13 பிக்குகள் ஏற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாரம் தாங்காமல் கேபிள் காரின் கம்பி அறுந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கேபிள் கார் உடைந்து வீழ்ந்து விபத்து; மற்றுமொரு பௌத்த பிக்கு சிகிச்சை பலனின்றி பலி குருநாகலை - மெல்சிரிபுரவின் பன்சியகம பகுதியில் பௌத்த வன ஆசிரமமான உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் அறுந்து விழுந்ததில் படுகாயமடைந்த மற்றுமொரு பிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 24 ஆம் திகதி இரவு 9.00 மணியளவில் புனித தலத்தில் மத சடங்குகளை முடித்துவிட்டு தியான மண்டபத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.விபத்து நடந்தபோது கேபிள் காரில் 13 பிக்குகள் பயணித்துள்ள நிலையில், அதில் ஏழு பிக்குகள் முன்னதாக உயிரிழந்தனர்.அவர்களில் மூவர் ருமேனியா, ரஷ்யா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு பிக்குகள் என பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தின்போது கேபிள் காரில் இருந்து குதித்த இரண்டு பிக்குகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் மேலும் நான்கு பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 41 வயதுடைய மற்றுமொரு பௌத்த பிக்கு இன்று உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த கேபிள் காரில் ஏற்றக் கூடிய அதிகூடிய எடையாக 500 கிலோகிராம் குறிப்பிடப்பட்டிருந்தபோதும் 13 பிக்குகள் ஏற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாரம் தாங்காமல் கேபிள் காரின் கம்பி அறுந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.