• May 24 2025

கடற் படையினர் குப்பைக்கு வைத்த தீயால் எரிந்து நாசமாகிய மீனவரின் வாடி

Thansita / May 24th 2025, 7:56 am
image

முல்லைதீவு செல்வபுரம் பகுதியில் கடற்கரையில் அமைந்துள்ள கடலோர கண்காணிப்பு கடற்படை முகாமின் குப்பைக்கு வைத்த தீ பரவி கடற்படையினரின் காணிக்குள் நின்ற பனை மரங்களை நாசமாகியுள்ளதுடன் கரையோரப் பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் வாடி முற்று முழுதாக எரிந்து சாம்பல் ஆகி உள்ளது

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது

கடற்கரையில் மீனவர்கள் அமைத்த கோட்டில்கள் தீயால் எரிந்து சேதமடைந்துள்ளன.

குறித்த கடற்படை முகாமில் குப்பைக்கு தீ வைத்துள்ளார்கள் இந்த தீயானது பரவி கடற்படை முகாமில் நின்ற பனை மரங்களில் பரவி உள்ளதுடன் தீ காற்றில் பரவி கடற்கரையில் வாடியமைத்து தொழில் செய்து வந்த ஒருவரின் வாடி மீது விழுந்தது வாடி முற்று முழுதாக எரிந்துள்ளது அதில் பெறுமதியிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது

அதனைத் தொடர்ந்து பரவிய தீ கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் அமைத்த கோட்டில்களிலும் பரவியுள்ளது சம்பவம் அறிந்து செல்வபுரம் கடற்கரையில்நின்ற இளைஞர்கள் தீவிரமாக செயற்பட்டுள்ளதுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள் இந்த தீ விபத்தில் வாடி முற்று முழுதாக எரிந்த கடற்தொழிலாழியின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது

அதேவேளை இந்த தீ விபத்தில் எரிகாயங்களுக்கு உள்ளான கடற்படையினர் ஒருவர் முல்லத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தீவிபத்தில் வாடி எரிந்து சாம்பலாகிய வாடியின் உரிமையாளர் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார் சம்பவம் தொடர்பாக பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்

கடற் படையினர் குப்பைக்கு வைத்த தீயால் எரிந்து நாசமாகிய மீனவரின் வாடி முல்லைதீவு செல்வபுரம் பகுதியில் கடற்கரையில் அமைந்துள்ள கடலோர கண்காணிப்பு கடற்படை முகாமின் குப்பைக்கு வைத்த தீ பரவி கடற்படையினரின் காணிக்குள் நின்ற பனை மரங்களை நாசமாகியுள்ளதுடன் கரையோரப் பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் வாடி முற்று முழுதாக எரிந்து சாம்பல் ஆகி உள்ளதுகுறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதுகடற்கரையில் மீனவர்கள் அமைத்த கோட்டில்கள் தீயால் எரிந்து சேதமடைந்துள்ளன.குறித்த கடற்படை முகாமில் குப்பைக்கு தீ வைத்துள்ளார்கள் இந்த தீயானது பரவி கடற்படை முகாமில் நின்ற பனை மரங்களில் பரவி உள்ளதுடன் தீ காற்றில் பரவி கடற்கரையில் வாடியமைத்து தொழில் செய்து வந்த ஒருவரின் வாடி மீது விழுந்தது வாடி முற்று முழுதாக எரிந்துள்ளது அதில் பெறுமதியிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளதுஅதனைத் தொடர்ந்து பரவிய தீ கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் அமைத்த கோட்டில்களிலும் பரவியுள்ளது சம்பவம் அறிந்து செல்வபுரம் கடற்கரையில்நின்ற இளைஞர்கள் தீவிரமாக செயற்பட்டுள்ளதுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள் இந்த தீ விபத்தில் வாடி முற்று முழுதாக எரிந்த கடற்தொழிலாழியின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது அதேவேளை இந்த தீ விபத்தில் எரிகாயங்களுக்கு உள்ளான கடற்படையினர் ஒருவர் முல்லத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்தீவிபத்தில் வாடி எரிந்து சாம்பலாகிய வாடியின் உரிமையாளர் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார் சம்பவம் தொடர்பாக பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்

Advertisement

Advertisement

Advertisement