சிவனொளிபாதமலைக்கு தரிசனம் செய்யச் சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணியொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த சுற்றுலாப் பயணி தனது மனைவியுடன் நேற்றையதினம்(19) பிற்பகல் நல்லதண்ணியாவுக்கு வந்து சுற்றுலா விடுதியில் தங்கியதுடன், இன்று (20) காலை சிவனொளிபாதமலைக்கு தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்த போது திடீரென சுகயீனமுற்றுள்ளார்.
இந்நிலையில், சுற்றுலாப் பயணி உடனடியாக இக்கிகாடுபனாவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்த சுற்றுலா பயணி, 67 வயதுடைய டென்மார்க் நாட்டைச் சார்ந்த ஜெப்டீன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் சடலம் மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி இலங்கைக்கு வந்த பின்னர் சிகிரியா பிரதேசத்தில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சுற்றுலாப் பயணியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திக்ஓயா ஆரம்ப வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்படும் எனவும் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் மனைவியிடம் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிவனொளிபாதமலைக்கு தரிசனத்திற்கு சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணி பரிதாப மரணம். சிவனொளிபாதமலைக்கு தரிசனம் செய்யச் சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணியொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்த சுற்றுலாப் பயணி தனது மனைவியுடன் நேற்றையதினம்(19) பிற்பகல் நல்லதண்ணியாவுக்கு வந்து சுற்றுலா விடுதியில் தங்கியதுடன், இன்று (20) காலை சிவனொளிபாதமலைக்கு தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்த போது திடீரென சுகயீனமுற்றுள்ளார்.இந்நிலையில், சுற்றுலாப் பயணி உடனடியாக இக்கிகாடுபனாவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு உயிரிழந்த சுற்றுலா பயணி, 67 வயதுடைய டென்மார்க் நாட்டைச் சார்ந்த ஜெப்டீன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.உயிரிழந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் சடலம் மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி இலங்கைக்கு வந்த பின்னர் சிகிரியா பிரதேசத்தில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த சுற்றுலாப் பயணியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திக்ஓயா ஆரம்ப வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்படும் எனவும் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் மனைவியிடம் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.