• May 04 2024

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலா? வெளியான தகவல் samugammedia

Chithra / Oct 23rd 2023, 10:23 am
image

Advertisement

 

அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக கூறப்படும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் மத்தியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இவ்வருட வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் அரசாங்கம் கலைக்க தயாராக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி அடுத்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், அடுத்த வருடம் மார்ச் மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், எந்தவொரு அரசியல் கட்சியாலும் பெரும்பான்மை பலத்தைப் பெற முடியாது என்பதே ஆளும்கட்சியின் நிலைப்பாடு ஆகும்.

அதன் பின்னர் கூட்டு அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டு அந்த கட்சிகள் அனைத்தும் ஜனாதிபதியிடம் சென்று புதிய அரசாங்கத்தை அமைத்து முன்னோக்கி பணிகளை தொடரும் என கூறப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலா வெளியான தகவல் samugammedia  அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக கூறப்படும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் மத்தியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது இவ்வருட வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் அரசாங்கம் கலைக்க தயாராக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி அடுத்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என கூறப்படுகின்றது.எவ்வாறாயினும், அடுத்த வருடம் மார்ச் மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், எந்தவொரு அரசியல் கட்சியாலும் பெரும்பான்மை பலத்தைப் பெற முடியாது என்பதே ஆளும்கட்சியின் நிலைப்பாடு ஆகும்.அதன் பின்னர் கூட்டு அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டு அந்த கட்சிகள் அனைத்தும் ஜனாதிபதியிடம் சென்று புதிய அரசாங்கத்தை அமைத்து முன்னோக்கி பணிகளை தொடரும் என கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement