• May 02 2024

யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ தவறால் கையை இழந்த சிறுமி...! சபையில் குரல் கொடுத்த இராதாகிருஸ்ணன்...! samugammedia

Sharmi / Sep 6th 2023, 3:34 pm
image

Advertisement

யாழ் போதனா வைத்தியசாலையில் சில தினங்களுக்கு முன்னர் 8 வயது சிறுமியின் மணி்கட்டுடன் கை அகற்றப்பட்டுள்ளது.  அதற்கு வைத்திய அதிகாரிகளும் தாதியர்களும் முறையான விதத்தில் சிகிச்சை வழங்காததே காரணமாகும் எனக் கூறப்படுகின்றது.  ஆகவே இவ்வாறான நிலைக்கு சுகாதார அமைச்சு தள்ளப்பட்டுள்ளது மிக வருத்தத்திற்குரியது என  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்றையதினம் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தரமற்ற மற்றும் முறையற்ற மருந்து வழங்கல் காரணமாக கிட்டத்தட்ட 14 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.   அரச வைத்தியசாலைகளுக்கு  மக்கள் செல்வதற்கு அச்சம் கொள்கின்றனர் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

2024 , 2025 ம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில்  விசேட சுகாதாரக்  கட்டமைப்பில்  3917 விசேட  வைத்தியர்கள் காணப்பட வேண்டும்.  ஆனால் 2184 வைத்தியர்களே தற்போது காணப்படுகின்றனர்.
இதேவேளை பயிற்சிக்காக 7 விசேட வைத்தியர்கள் வெளிநாடு சென்ற நிலையில் இருவரே இதுவரை நாடு திரும்பியுள்ளனர்.

2021 - 2023 காலப்பகுதியி்ல் 378 விசேட  வைத்தியர்கள் ஓய்வுபெற்று வெளிநாட்டுக்கு சென்றுள்ளதுடன் 282 விசேட .வைததியர்கள் ஓய்வு  பெற்றுள்ளனர். தற்சமயம் வைத்தியர்கள் வெளிநாடு செல்வதற்கு அதிக  ஆர்வம் காட்டுவதால் இவ் எண்ணி்க்கை எதிர்காலத்தில் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 3 மாதங்களுக்கு முன் கண் சிகிச்சைக்காக  சென்ற 13 பேரின் கண்பார்வை தற்போது மிக மோசமாக உள்ளது. அவர்களுக்கு  நஷ்டஈடு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டாலும் இதுவரை வழங்கப்படவில்லை.

பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழும் பெருந்தோட்டத்துறை மக்களுக்கு சுகாதாரம் கிடைக்காவிட்டால் அவர்களது வாழ்க்கை மிக மோசமடைந்துவிடும். சுகாதாரம், பராமரிப்பு  போசாக்கு போன்ற பல்வேறு  பிரச்சினைகள் காணப்படுகின்றது.  

நுவரெலியப் பகுியில் டயலிசிஸ் சிகிச்சையை மேற்கொள்ளவதற்கு கடினமான நிலை தொடர்கின்றது.  இதேவேளை பெருந்தோட்டத் துறை நிர்வாகத்துக்கு 500 வைத்தியசாலைகளில் 44 வைத்தியசாலைகள் அரசாங்கத்தால்  இதுவரை பொறுப்பேற்கப்பட்டுள்ளது. இதேவேளை 59 வைத்தியசாலைகளுக்கான கபினட் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் அரசாங்கத்தால் சுவீகரி்கப்படாதுள்ளது. எனவே  குறித்த வைத்தியசாலைக்கு  முறையான  தகைமையுடைய வைத்தியர்கள் நியமி்க்கப்பட வேண்டும்.  

இவற்றை  ஏனைய மக்களுடன் ஒருங்கிணைத்து நோக்கும் போது பாரதூரமான செயற்பாடாகவுள்ளது.   இதேவேளை மலையகத்தில்   56.3 சதவீதமாகக் காணப்படும் வறுமை நிலையை மாற்ற வைத்தியசாலைகளை முறையாக அமைத்து முறையான வைத்தியர்கள் , தாதியர்ளை நியமி்க்க வேண்டும்.

இந் நடவடிக்கைகள்  மாகாண சபைகள் ஊடாக நடைபெற்று வந்தாலும் எதிர்காலங்களில் மாகாணசபைத் தேர்தலை நடாத்தி அதனூடாக  மேற்கொள்ளப்பட வேண்டும்.  பெருந்தோட்டப் பகுதியி்ல்  உணவின்றி பல சிறுவர்கள் மயங்கி விழும் நிலையுள்ளதால் சிறுவர் பராமரிப்பு நிலையம் , ஆரம்பப் பள்ளி போன்றவற்றிற்கு  தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனியூடாக மதிய உணவு  வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  

மகாவலி கங்கை உற்பத்தியாகும் நுவரெலியா மாவட்டத்திலிருந்து பல நீர்த்தேக்கங்களுக்கு நீர் விநியோகிப்பதனூடாகக் கிடைக்கின்ற மின்சாரத்தை இலங்கை நாட்டு மக்கள் பயன்படுத்தும் நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் 70 சதவீதததிற்கு மேற்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லாது காணப்படுவதுடன் மின்சாரமும் இல்லாது காணப்படுகின்றது.

எனவே ஒட்டுமொத்த இலங்கையிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முன் வர வேண்டும் எனத் தெரிவித்தார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ தவறால் கையை இழந்த சிறுமி. சபையில் குரல் கொடுத்த இராதாகிருஸ்ணன். samugammedia யாழ் போதனா வைத்தியசாலையில் சில தினங்களுக்கு முன்னர் 8 வயது சிறுமியின் மணி்கட்டுடன் கை அகற்றப்பட்டுள்ளது.  அதற்கு வைத்திய அதிகாரிகளும் தாதியர்களும் முறையான விதத்தில் சிகிச்சை வழங்காததே காரணமாகும் எனக் கூறப்படுகின்றது.  ஆகவே இவ்வாறான நிலைக்கு சுகாதார அமைச்சு தள்ளப்பட்டுள்ளது மிக வருத்தத்திற்குரியது என  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.பாராளுமன்றில் இன்றையதினம் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், தரமற்ற மற்றும் முறையற்ற மருந்து வழங்கல் காரணமாக கிட்டத்தட்ட 14 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.   அரச வைத்தியசாலைகளுக்கு  மக்கள் செல்வதற்கு அச்சம் கொள்கின்றனர் என்பதைச் சிந்திக்க வேண்டும். 2024 , 2025 ம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில்  விசேட சுகாதாரக்  கட்டமைப்பில்  3917 விசேட  வைத்தியர்கள் காணப்பட வேண்டும்.  ஆனால் 2184 வைத்தியர்களே தற்போது காணப்படுகின்றனர். இதேவேளை பயிற்சிக்காக 7 விசேட வைத்தியர்கள் வெளிநாடு சென்ற நிலையில் இருவரே இதுவரை நாடு திரும்பியுள்ளனர்.2021 - 2023 காலப்பகுதியி்ல் 378 விசேட  வைத்தியர்கள் ஓய்வுபெற்று வெளிநாட்டுக்கு சென்றுள்ளதுடன் 282 விசேட .வைததியர்கள் ஓய்வு  பெற்றுள்ளனர். தற்சமயம் வைத்தியர்கள் வெளிநாடு செல்வதற்கு அதிக  ஆர்வம் காட்டுவதால் இவ் எண்ணி்க்கை எதிர்காலத்தில் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த 3 மாதங்களுக்கு முன் கண் சிகிச்சைக்காக  சென்ற 13 பேரின் கண்பார்வை தற்போது மிக மோசமாக உள்ளது. அவர்களுக்கு  நஷ்டஈடு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டாலும் இதுவரை வழங்கப்படவில்லை. பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழும் பெருந்தோட்டத்துறை மக்களுக்கு சுகாதாரம் கிடைக்காவிட்டால் அவர்களது வாழ்க்கை மிக மோசமடைந்துவிடும். சுகாதாரம், பராமரிப்பு  போசாக்கு போன்ற பல்வேறு  பிரச்சினைகள் காணப்படுகின்றது.  நுவரெலியப் பகுியில் டயலிசிஸ் சிகிச்சையை மேற்கொள்ளவதற்கு கடினமான நிலை தொடர்கின்றது.  இதேவேளை பெருந்தோட்டத் துறை நிர்வாகத்துக்கு 500 வைத்தியசாலைகளில் 44 வைத்தியசாலைகள் அரசாங்கத்தால்  இதுவரை பொறுப்பேற்கப்பட்டுள்ளது. இதேவேளை 59 வைத்தியசாலைகளுக்கான கபினட் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் அரசாங்கத்தால் சுவீகரி்கப்படாதுள்ளது. எனவே  குறித்த வைத்தியசாலைக்கு  முறையான  தகைமையுடைய வைத்தியர்கள் நியமி்க்கப்பட வேண்டும்.  இவற்றை  ஏனைய மக்களுடன் ஒருங்கிணைத்து நோக்கும் போது பாரதூரமான செயற்பாடாகவுள்ளது.   இதேவேளை மலையகத்தில்   56.3 சதவீதமாகக் காணப்படும் வறுமை நிலையை மாற்ற வைத்தியசாலைகளை முறையாக அமைத்து முறையான வைத்தியர்கள் , தாதியர்ளை நியமி்க்க வேண்டும்.இந் நடவடிக்கைகள்  மாகாண சபைகள் ஊடாக நடைபெற்று வந்தாலும் எதிர்காலங்களில் மாகாணசபைத் தேர்தலை நடாத்தி அதனூடாக  மேற்கொள்ளப்பட வேண்டும்.  பெருந்தோட்டப் பகுதியி்ல்  உணவின்றி பல சிறுவர்கள் மயங்கி விழும் நிலையுள்ளதால் சிறுவர் பராமரிப்பு நிலையம் , ஆரம்பப் பள்ளி போன்றவற்றிற்கு  தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனியூடாக மதிய உணவு  வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  மகாவலி கங்கை உற்பத்தியாகும் நுவரெலியா மாவட்டத்திலிருந்து பல நீர்த்தேக்கங்களுக்கு நீர் விநியோகிப்பதனூடாகக் கிடைக்கின்ற மின்சாரத்தை இலங்கை நாட்டு மக்கள் பயன்படுத்தும் நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் 70 சதவீதததிற்கு மேற்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லாது காணப்படுவதுடன் மின்சாரமும் இல்லாது காணப்படுகின்றது. எனவே ஒட்டுமொத்த இலங்கையிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முன் வர வேண்டும் எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement