• May 17 2024

உயர்தரம் மற்றும் சாதாரண பரீட்சைகளை முடித்த மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு..!

Chithra / Oct 1st 2023, 1:53 pm
image

Advertisement


உயர்தரம் மற்றும் சாதாரண பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் அந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இம்முறை உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான தொழில்சார் பயிற்சி நெறிகள்  நாடளாவிய ரீதியில் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காகவும் பரீட்சை நிறைவடைந்த பின்னர் தொழிற்பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ள கல்வியமைச்சர்,  உயர்தர மற்றும் சாதரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானோர் இந்த தொழிற்பயிற்சி நெறிகளில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

உயர்தரம் மற்றும் சாதாரண பரீட்சைகளை முடித்த மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு. உயர்தரம் மற்றும் சாதாரண பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் அந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதன்படி, இம்முறை உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான தொழில்சார் பயிற்சி நெறிகள்  நாடளாவிய ரீதியில் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.எதிர்வரும் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காகவும் பரீட்சை நிறைவடைந்த பின்னர் தொழிற்பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ள கல்வியமைச்சர்,  உயர்தர மற்றும் சாதரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானோர் இந்த தொழிற்பயிற்சி நெறிகளில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement