• May 16 2024

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள விகாரை ஒன்றில் அதிகளவில் குளவி கூடுகள்- மக்கள் அச்சத்தில்! samugammedia

Tamil nila / Nov 18th 2023, 6:27 pm
image

Advertisement

நல்லதண்ணி நகரில் உள்ள நாக தீப விகாரையில் அமைத்து இருக்கும் உயரமான புத்தர் சிலையில் சுமார் 12 க்கு மேற்பட்ட குளவி கூடுகள் உள்ளன.

இந்த குளவி கூடுகள் சிவனடி பாத மலைக்கு செல்லும் பிரதான சாலையில் உள்ளதால் இந்த சாலை வழியாக சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் எந்த நேரத்திலும் குளவி கொட்டுக்கு இலக்காகும் நிலை உள்ளது.

தற்போதும் இப் பகுதியில் காலை வேளையில் கடும் உஷ்ணம் மாலை வேளையில் கடும் காற்று மழை காரணமாக கடும் காற்று வீசும் போது குளவி கூடுகளில் உள்ள குளவிகள் கலைவதால் ஆபத்து நிறைந்தது காரணமாக இந்த குளவி கூடுகளை நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்துடன் நல்லதண்ணி நகரில் இருந்து சிவனடி பாத மலைக்கு செல்லும் பிரதான சாலையில் அருகில் பல பாரிய மரங்களிலும் இவ்வாறு குளவி கூடுகள் உள்ளன.

எதிர் வரும் டிசம்பர் மாதம் 26 ம் திகதி முதல் சிவனடி பாத மலை பருவகாலம் ஆரம்பமாவதால் இவ்வாறு உள்ள அனைத்து குளவி கூடுகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள விகாரை ஒன்றில் அதிகளவில் குளவி கூடுகள்- மக்கள் அச்சத்தில் samugammedia நல்லதண்ணி நகரில் உள்ள நாக தீப விகாரையில் அமைத்து இருக்கும் உயரமான புத்தர் சிலையில் சுமார் 12 க்கு மேற்பட்ட குளவி கூடுகள் உள்ளன.இந்த குளவி கூடுகள் சிவனடி பாத மலைக்கு செல்லும் பிரதான சாலையில் உள்ளதால் இந்த சாலை வழியாக சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் எந்த நேரத்திலும் குளவி கொட்டுக்கு இலக்காகும் நிலை உள்ளது.தற்போதும் இப் பகுதியில் காலை வேளையில் கடும் உஷ்ணம் மாலை வேளையில் கடும் காற்று மழை காரணமாக கடும் காற்று வீசும் போது குளவி கூடுகளில் உள்ள குளவிகள் கலைவதால் ஆபத்து நிறைந்தது காரணமாக இந்த குளவி கூடுகளை நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.அத்துடன் நல்லதண்ணி நகரில் இருந்து சிவனடி பாத மலைக்கு செல்லும் பிரதான சாலையில் அருகில் பல பாரிய மரங்களிலும் இவ்வாறு குளவி கூடுகள் உள்ளன.எதிர் வரும் டிசம்பர் மாதம் 26 ம் திகதி முதல் சிவனடி பாத மலை பருவகாலம் ஆரம்பமாவதால் இவ்வாறு உள்ள அனைத்து குளவி கூடுகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement