பிள்ளைகளுக்கு, உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் சட்டம் விரைவாக நிறைவேற்றப்படும் என்று இலங்கையின் நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தண்டனை என்பது, ஒரு பிள்ளையின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
வன்முறையே பிரச்சினைகளை தீர்க்கும் என்று பிள்ளைகளும் நம்பினால், அவர்கள் அந்த நம்பிக்கையை, தாம் பெரியவர்களாக வளர்ந்தபின் முன்னெடுத்துச் செல்வார்கள்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் பலர், பிரச்சினையான குடும்பங்களிலிருந்து உருவாகிறார்கள் என்று அமைச்சர் கூறினார்.
இந்நிலையில், வழி தவறும் பிள்ளையை சரிசெய்வது எளிது, ஆனால் வழி தவறிய பெரியவரை சரிசெய்வது கடினம்.
நீதிமன்ற வழக்குக்கு முன்னிலையாகும் சிறுவர்கள் உளவியல் ரீதியில் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.
ஆகவே இனிவரும் காலங்களில் சிறுவர்களை நீதிமன்றத்துக்கு அழைக்காமல் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு உரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஏதேனும் வழக்குக்கு சிறுவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்து வரும் போது அவர்கள் ஏனைய கைதிகளுடன் ஒன்றாக சிறைச்சாலை பேருந்தில் அழைத்து வரும் நிலைமை காணப்படுகிறது. இது முறையற்றது.
ஆகவே சிறுவர்களை பிரத்தியேகமாக நீதிமன்றத்துக்கு அழைத்து வருவதற்கு பாதுகாப்பான வகையில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இலங்கையில் சிறுவர்கள் தொடர்பில் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள சட்டம் பிள்ளைகளுக்கு, உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் சட்டம் விரைவாக நிறைவேற்றப்படும் என்று இலங்கையின் நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தண்டனை என்பது, ஒரு பிள்ளையின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.வன்முறையே பிரச்சினைகளை தீர்க்கும் என்று பிள்ளைகளும் நம்பினால், அவர்கள் அந்த நம்பிக்கையை, தாம் பெரியவர்களாக வளர்ந்தபின் முன்னெடுத்துச் செல்வார்கள்.ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் பலர், பிரச்சினையான குடும்பங்களிலிருந்து உருவாகிறார்கள் என்று அமைச்சர் கூறினார்.இந்நிலையில், வழி தவறும் பிள்ளையை சரிசெய்வது எளிது, ஆனால் வழி தவறிய பெரியவரை சரிசெய்வது கடினம்.நீதிமன்ற வழக்குக்கு முன்னிலையாகும் சிறுவர்கள் உளவியல் ரீதியில் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.ஆகவே இனிவரும் காலங்களில் சிறுவர்களை நீதிமன்றத்துக்கு அழைக்காமல் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு உரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.ஏதேனும் வழக்குக்கு சிறுவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்து வரும் போது அவர்கள் ஏனைய கைதிகளுடன் ஒன்றாக சிறைச்சாலை பேருந்தில் அழைத்து வரும் நிலைமை காணப்படுகிறது. இது முறையற்றது. ஆகவே சிறுவர்களை பிரத்தியேகமாக நீதிமன்றத்துக்கு அழைத்து வருவதற்கு பாதுகாப்பான வகையில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.