• Apr 08 2025

வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி - பலியெடுத்த கார்

Thansita / Apr 6th 2025, 9:25 pm
image

கம்பஹா மாபாகே பகுதியில் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது கார் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது

மேலும் சம்பவத்தில் படுகாயமடைந்த இரு சிறுவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

கம்பஹா மாபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிசறை ஜேகொப் மாவத்தை பகுதியில் இன்றையதினம் வேறு வீதியினூடாக வந்த கார் ஒன்று வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது மோதியுள்ளது.

சம்பவத்தில் 3 சிறுவர்களும்  படுகாயமடைந்து  ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் படுகாயமடைந்த சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

5 வயதுடய வெலிசறை, ராகமை பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 காயமடைந்த ஏனைய சிறுவர்கள் தொடர்ந்தும் ராகமை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது

விபத்தினை ஏற்படுத்திய  கார் சாரதி காரை சம்பவ இடத்திலேயே கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது

வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி - பலியெடுத்த கார் கம்பஹா மாபாகே பகுதியில் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது கார் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளதுமேலும் சம்பவத்தில் படுகாயமடைந்த இரு சிறுவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கம்பஹா மாபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிசறை ஜேகொப் மாவத்தை பகுதியில் இன்றையதினம் வேறு வீதியினூடாக வந்த கார் ஒன்று வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது மோதியுள்ளது.சம்பவத்தில் 3 சிறுவர்களும்  படுகாயமடைந்து  ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் படுகாயமடைந்த சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.5 வயதுடய வெலிசறை, ராகமை பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காயமடைந்த ஏனைய சிறுவர்கள் தொடர்ந்தும் ராகமை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளதுவிபத்தினை ஏற்படுத்திய  கார் சாரதி காரை சம்பவ இடத்திலேயே கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement