• May 08 2024

கிராஞ்சி மீனவ சமூகத்திற்கு ஆதரவாக யாழில் முக்கிய போராட்டம் முன்னெடுப்பு!

Sharmi / Dec 16th 2022, 12:26 pm
image

Advertisement

கிளிநொச்சி கிராஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று  (16) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த போராட்டத்தினை கிளிநொச்சிஇமன்னார்இமுல்லைத்தீவு மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம்இவடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழுஇகிராமிய உழைப்புச் சங்கம் ஆகியன இணைந்து நடத்தியிருந்தனர். 

யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நிறைவடையவுள்ளது.

இந்த போராட்டத்தில் மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள், மீனவர்கள்,  மீனவ குடும்பங்கள் ,தாய்மார்,பெண்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும்  இந்த போராட்ட நிறைவில் வடமாகாண ஆளுநர் செயலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கு மகஜர் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கிராஞ்சி மீனவ சமூகத்திற்கு ஆதரவாக யாழில் முக்கிய போராட்டம் முன்னெடுப்பு கிளிநொச்சி கிராஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று  (16) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த போராட்டத்தினை கிளிநொச்சிஇமன்னார்இமுல்லைத்தீவு மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம்இவடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழுஇகிராமிய உழைப்புச் சங்கம் ஆகியன இணைந்து நடத்தியிருந்தனர். யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நிறைவடையவுள்ளது.இந்த போராட்டத்தில் மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள், மீனவர்கள்,  மீனவ குடும்பங்கள் ,தாய்மார்,பெண்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.மேலும்  இந்த போராட்ட நிறைவில் வடமாகாண ஆளுநர் செயலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கு மகஜர் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement