• Apr 27 2024

நாங்கள் தேர்தலுக்கு ரெடி - மஹிந்த அணி அறிவிப்பு

harsha / Dec 16th 2022, 12:24 pm
image

Advertisement

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம் உள்ள உள்ளுராட்சி தலைவர்கள் குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உரிய நேரத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்ததாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு கடந்த புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

தேர்தல் காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக அவர்களுடன் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தலைவர்கள் தேர்தலுக்குத் தயாராக இருப்பதாகவும் ஆனால் தேர்தல் காலங்களில் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுமானால் அது அவர்களின் தேர்தல் எதிர்பார்ப்புகளுக்கு இடையூறாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உள்ளுராட்சி அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் நலன் மற்றும் சமூகத் திட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குமாறும் அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சந்திப்பில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவும் கலந்துகொண்டார் என அறிய முடிகிறது.

நாங்கள் தேர்தலுக்கு ரெடி - மஹிந்த அணி அறிவிப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம் உள்ள உள்ளுராட்சி தலைவர்கள் குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உரிய நேரத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்ததாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்த சந்திப்பு கடந்த புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.தேர்தல் காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக அவர்களுடன் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சித் தலைவர்கள் தேர்தலுக்குத் தயாராக இருப்பதாகவும் ஆனால் தேர்தல் காலங்களில் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுமானால் அது அவர்களின் தேர்தல் எதிர்பார்ப்புகளுக்கு இடையூறாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உள்ளுராட்சி அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் நலன் மற்றும் சமூகத் திட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குமாறும் அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த சந்திப்பில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவும் கலந்துகொண்டார் என அறிய முடிகிறது.

Advertisement

Advertisement

Advertisement