• Apr 01 2025

26 லீற்றர் கசிப்பினை பேருந்தில் கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர் கைது

Tharmini / Nov 12th 2024, 2:36 pm
image

விசுவமடு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தில் 26 லிட்டர் கசிப்பினை சூட்சுமமான முறையில் பயண பொதியில் மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட,

சந்தேகநபர் ஒருவர், தர்மபுரம் பொலிசாருக்கு , இன்று (12) கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக பேருந்தை சோதனையிட்ட பொழுது,

சூட்சுமமான முறையில் பயணப் பொதியில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட 26 லீற்றர் கசிப்பினை பொலிசார் பறிமுதல் செய்துள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தடையப் பொருட்களை அன்றைய தினம் (12) கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டி. எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.



26 லீற்றர் கசிப்பினை பேருந்தில் கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர் கைது விசுவமடு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தில் 26 லிட்டர் கசிப்பினை சூட்சுமமான முறையில் பயண பொதியில் மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட, சந்தேகநபர் ஒருவர், தர்மபுரம் பொலிசாருக்கு , இன்று (12) கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக பேருந்தை சோதனையிட்ட பொழுது, சூட்சுமமான முறையில் பயணப் பொதியில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட 26 லீற்றர் கசிப்பினை பொலிசார் பறிமுதல் செய்துள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தடையப் பொருட்களை அன்றைய தினம் (12) கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டி. எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement