• Jun 30 2024

முள்ளிப்பொத்தானையில் பெண் வேசம் போட்டு தாய் ,மகள் மீது கத்திக்குத்து நடாத்தி தப்பிக்க முயன்றவர் கைது...!

Anaath / Jun 27th 2024, 4:56 pm
image

Advertisement

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சநகர் பகுதியில் பெண் வேடம் போட்டு தாய் மற்றும்  மகளை கத்தியால் தாக்கி விட்டு தப்பிக்க முயன்றவரை கைது செய்துள்ளதாக  தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று (26) மாலை இடம் பெற்றுள்ளது.

 தாக்குதல் சம்பவம் தொடர்பில்  38 வயதுடைய  குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரால்  கைது செய்துள்ளார்.

அதேவேளை குறித்த தாக்குதலுக்கு உள்ளான 54 வயதுடைய தாயும்  ,31 வயதுடைய மகளும் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தாய் மட்டக்களப்பு பொது வைத்தியசாலைக்கும் மகள் கந்தளாய் தளவைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.  

குறித்த சம்பவம் தொடர்பாக  தெரியவருகையில், 

குறித்த சந்தேகநபர் ஈச்ச நகர் பகுதியில் தொலைபேசி திருத்தகம் ஒன்றை நடாத்திவந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த குடும்பப்பெண் குறித்த நபருக்கு கடனாக பணம் வழங்கியுள்ளார். 

இந்த நிலையில் கொடுத்த பணத்தை மீளப்பெறுவதற்காக நேற்றைய தினம் குறித்த குடும்பப்பெண், சந்தேகநபரின் கடைக்குச் சென்று பணத்தை கோரியுள்ளார். 

அவர் பணம் கொடுக்க மறுத்ததால் அங்கு வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அந்த பெண் அவ்விடத்திலிருந்து சென்றுள்ளார். 

பின்னர், நேற்று மாலை குறித்த சந்தேக நபர் அந்த பெண்ணின்  வீட்டுக்குச் சென்று பெண்ணுக்கும் அவரின் மகளுக்கு கத்தியால் தாறுமாறாக குத்தியுள்ளார் . பின்னர் இரத்தக்கறைகளை தண்ணீரால் கழுவிவிட்டு, அந்த வீட்டில் இருந்த ஹபாயாவை அணிந்து பெண் வேடத்தில் வெளியே வந்துள்ளார். 

முகத்தை மூடி ஹபாயா அணிந்து வெளியே நடமாடியவர் மேல் சந்தேகமடைந்த  பொதுமக்கள் அவரை பிடித்து விசாரித்ததுடன், பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்


முள்ளிப்பொத்தானையில் பெண் வேசம் போட்டு தாய் ,மகள் மீது கத்திக்குத்து நடாத்தி தப்பிக்க முயன்றவர் கைது. தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சநகர் பகுதியில் பெண் வேடம் போட்டு தாய் மற்றும்  மகளை கத்தியால் தாக்கி விட்டு தப்பிக்க முயன்றவரை கைது செய்துள்ளதாக  தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் நேற்று (26) மாலை இடம் பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பில்  38 வயதுடைய  குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரால்  கைது செய்துள்ளார்.அதேவேளை குறித்த தாக்குதலுக்கு உள்ளான 54 வயதுடைய தாயும்  ,31 வயதுடைய மகளும் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தாய் மட்டக்களப்பு பொது வைத்தியசாலைக்கும் மகள் கந்தளாய் தளவைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.  குறித்த சம்பவம் தொடர்பாக  தெரியவருகையில், குறித்த சந்தேகநபர் ஈச்ச நகர் பகுதியில் தொலைபேசி திருத்தகம் ஒன்றை நடாத்திவந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த குடும்பப்பெண் குறித்த நபருக்கு கடனாக பணம் வழங்கியுள்ளார். இந்த நிலையில் கொடுத்த பணத்தை மீளப்பெறுவதற்காக நேற்றைய தினம் குறித்த குடும்பப்பெண், சந்தேகநபரின் கடைக்குச் சென்று பணத்தை கோரியுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் அங்கு வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அந்த பெண் அவ்விடத்திலிருந்து சென்றுள்ளார். பின்னர், நேற்று மாலை குறித்த சந்தேக நபர் அந்த பெண்ணின்  வீட்டுக்குச் சென்று பெண்ணுக்கும் அவரின் மகளுக்கு கத்தியால் தாறுமாறாக குத்தியுள்ளார் . பின்னர் இரத்தக்கறைகளை தண்ணீரால் கழுவிவிட்டு, அந்த வீட்டில் இருந்த ஹபாயாவை அணிந்து பெண் வேடத்தில் வெளியே வந்துள்ளார். முகத்தை மூடி ஹபாயா அணிந்து வெளியே நடமாடியவர் மேல் சந்தேகமடைந்த  பொதுமக்கள் அவரை பிடித்து விசாரித்ததுடன், பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement