• Nov 10 2024

மூடப்பட்டது கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி...! 52 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு...!

Sharmi / Jul 16th 2024, 5:41 pm
image

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை  52 மனித எலுப்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன நிலையில் இன்றையதினம்(16)  புதைகுழி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி கடந்த  ஆண்டு 2023.06.29 ஆம் திகதி  இனம்காணப்பட்ட நிலையில் மூன்று கட்டங்களாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு இதுவரை 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்றுடன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களின் போது 40 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு கடந்த 04.07.2024 அன்று ஆரம்பமாகி 15.07.2024 வரைஇடம்பெற்று  12 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின்,  இன்றைய (16) அகழ்வாய்வுப் பணிகளின் நிறைவில் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ   ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்  இதனை தெரிவித்தார்

52 மனித எச்சங்களுடன் சான்று ஆதாரப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன .

தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் ஸ்கான் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் இந்த மனிதப் புதைகுழி மேலும் நீடிப்பதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை என்ற நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் பகுதிளயவில் மூடப்பட்டுள்ளன.

இன்னும் ஒரு சில தினங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பணியகத்தினை சேர்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு முற்று முழுதாக இந்த மனித புதைகுழிகளை மூடுவார்கள் என முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தலைமையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான  குழுவினர், தடயவியல் பொலிசார், உள்ளிட்ட தரப்பினரின் முன்னிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் நீதிபதி முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு கட்ட அகழ்வாய்வுகளின்போது  40மனித  எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை  மீட்கப்பட்ட 12 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகளுடன் மொத்தம் 52 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







மூடப்பட்டது கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி. 52 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை  52 மனித எலுப்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன நிலையில் இன்றையதினம்(16)  புதைகுழி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி கடந்த  ஆண்டு 2023.06.29 ஆம் திகதி  இனம்காணப்பட்ட நிலையில் மூன்று கட்டங்களாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு இதுவரை 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்றுடன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.இரண்டு கட்டங்களின் போது 40 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு கடந்த 04.07.2024 அன்று ஆரம்பமாகி 15.07.2024 வரைஇடம்பெற்று  12 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின்,  இன்றைய (16) அகழ்வாய்வுப் பணிகளின் நிறைவில் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ   ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்  இதனை தெரிவித்தார்52 மனித எச்சங்களுடன் சான்று ஆதாரப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன .தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் ஸ்கான் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் இந்த மனிதப் புதைகுழி மேலும் நீடிப்பதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை என்ற நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் பகுதிளயவில் மூடப்பட்டுள்ளன.இன்னும் ஒரு சில தினங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பணியகத்தினை சேர்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு முற்று முழுதாக இந்த மனித புதைகுழிகளை மூடுவார்கள் என முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தலைமையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான  குழுவினர், தடயவியல் பொலிசார், உள்ளிட்ட தரப்பினரின் முன்னிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் நீதிபதி முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு கட்ட அகழ்வாய்வுகளின்போது  40மனித  எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை  மீட்கப்பட்ட 12 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகளுடன் மொத்தம் 52 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement