• Jul 01 2025

தெலுங்கானா இரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து;பலி 37 ஆக உயர்வு; மேலும் அதிகரிக்க வாய்ப்பு

Chithra / Jul 1st 2025, 11:31 am
image


தெலுங்கானாவில், ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. 2வது நாளாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

தெலுங்கானாவில் சங்கரெட்டி மாவட்டத்தின் பதஞ்சேரு பகுதியில் பாஷ்மிலராம் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு, ஷிகாச்சி ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இதில், 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று பணியில் இருந்தபோது தொழிற்சாலையில் இருந்த உலை ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் பதறியபடி வெளியேறினர். 

எனினும், உலையின் அருகே இருந்த தொழிலாளர்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். 

வெடிப்பின் தாக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால், சில தொழிலாளர்கள் 100 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். 

தகவலறிந்த போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு உதவியுடன் உள்ளே இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை நீண்டநேரம் போராடி, தீயணைப்புப் படையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

விபத்தில் சிக்கி இந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

10க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் 2வது நாளாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, உயர்மட்டக் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.


தெலுங்கானா இரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து;பலி 37 ஆக உயர்வு; மேலும் அதிகரிக்க வாய்ப்பு தெலுங்கானாவில், ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. 2வது நாளாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.தெலுங்கானாவில் சங்கரெட்டி மாவட்டத்தின் பதஞ்சேரு பகுதியில் பாஷ்மிலராம் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு, ஷிகாச்சி ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது.இதில், 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று பணியில் இருந்தபோது தொழிற்சாலையில் இருந்த உலை ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் பதறியபடி வெளியேறினர். எனினும், உலையின் அருகே இருந்த தொழிலாளர்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். வெடிப்பின் தாக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால், சில தொழிலாளர்கள் 100 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். தகவலறிந்த போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு உதவியுடன் உள்ளே இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை நீண்டநேரம் போராடி, தீயணைப்புப் படையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் சிக்கி இந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.10க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் 2வது நாளாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, உயர்மட்டக் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement