திருகோணமலை மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் 76 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு "நமது தேசிய வீரர்களுடன் ஒரு தருணம்" எனும் தொனிப்பொருளிலான நிகழ்வானது இன்று (02) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
1948 ஆம் ஆண்டு இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னோடியாக இருந்த தேசிய வீரர்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் இடம்பெற்றதுடன், தனிநபர்களாக நாம் வெற்றியடைய வேண்டிய பண்புகள் குறித்தும் மாவட்ட செயலாளரால் எடுத்துரைக்கப்பட்டது.
76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பிக்கும் முகமாக மாவட்டச் செயலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் மாவட்ட செயலாளரினால் இதன்போது நாட்டப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.சுதாகரன்,மாவட்ட செயலக பதவிநிலை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
திருமலையில் 'நமது தேசிய வீரர்களுடன் ஒரு தருணம்' நிகழ்வு.samugammedia திருகோணமலை மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் 76 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு "நமது தேசிய வீரர்களுடன் ஒரு தருணம்" எனும் தொனிப்பொருளிலான நிகழ்வானது இன்று (02) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.1948 ஆம் ஆண்டு இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னோடியாக இருந்த தேசிய வீரர்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் இடம்பெற்றதுடன், தனிநபர்களாக நாம் வெற்றியடைய வேண்டிய பண்புகள் குறித்தும் மாவட்ட செயலாளரால் எடுத்துரைக்கப்பட்டது.76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பிக்கும் முகமாக மாவட்டச் செயலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் மாவட்ட செயலாளரினால் இதன்போது நாட்டப்பட்டது.இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.சுதாகரன்,மாவட்ட செயலக பதவிநிலை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர்.