• May 04 2024

நடைபாதை வியாபார நிலையங்கள் அகற்றம்..! வவுனியா நகரசபை அதிரடி நடவடிக்கை

Chithra / Feb 2nd 2024, 1:38 pm
image

Advertisement

 

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள நடைபாதை வியாபார நிலையங்கள் நகரசபையால் இன்று அகற்றப்பட்டுள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலை சந்தியில் இருந்து ஹொரவப்பொத்தான வீதி மற்றும் சந்தை உள்வட்ட வீதி ஆகியவை நடைபாதை வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

இதனால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டுவருவதுடன், விபத்துக்களை சந்திக்கும் நிலைமையும் எற்பட்டுள்ளது.

நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரம் மேற்கொள்ளப்படுவதால் பாதசாரிகள் பிரதான வீதியால் நடந்து செல்லவேண்டிய அவலநிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் நகரசபை நடவடிக்கை எடுத்திருந்தபோதிலும் தினந்தோறும் நடைபாதையினை ஆக்கிரமிக்கும் வியாபார நிலையங்கள் அதிகரித்து சென்றுள்ளது.

இந்நிலையில் சந்தைசுற்றுவட்ட வீதிக்கு இன்றையதினம் சென்ற வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் போக்குவரத்து பொலிஸார், நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றியதுடன், அவர்களது பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேவேளை ஹொறவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள நடைபாதை விற்பனை நிலையங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கையினை நகரசபை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நடைபாதை வியாபார நிலையங்கள் அகற்றம். வவுனியா நகரசபை அதிரடி நடவடிக்கை  வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள நடைபாதை வியாபார நிலையங்கள் நகரசபையால் இன்று அகற்றப்பட்டுள்ளது.வவுனியா பொது வைத்தியசாலை சந்தியில் இருந்து ஹொரவப்பொத்தான வீதி மற்றும் சந்தை உள்வட்ட வீதி ஆகியவை நடைபாதை வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.இதனால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டுவருவதுடன், விபத்துக்களை சந்திக்கும் நிலைமையும் எற்பட்டுள்ளது.நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரம் மேற்கொள்ளப்படுவதால் பாதசாரிகள் பிரதான வீதியால் நடந்து செல்லவேண்டிய அவலநிலைமை ஏற்பட்டுள்ளது.இது தொடர்பில் நகரசபை நடவடிக்கை எடுத்திருந்தபோதிலும் தினந்தோறும் நடைபாதையினை ஆக்கிரமிக்கும் வியாபார நிலையங்கள் அதிகரித்து சென்றுள்ளது.இந்நிலையில் சந்தைசுற்றுவட்ட வீதிக்கு இன்றையதினம் சென்ற வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் போக்குவரத்து பொலிஸார், நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றியதுடன், அவர்களது பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.இதேவேளை ஹொறவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள நடைபாதை விற்பனை நிலையங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கையினை நகரசபை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement