• Apr 27 2024

எரிபொருள் கோட்டா குறித்து வெளியான புதிய அறிவிப்பு!

Chithra / Jan 19th 2023, 10:57 am
image

Advertisement

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எரிபொருள் அளவை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ள போதிலும், அதற்கான அனுமதியை வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நேற்று (புதன்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “தற்போது எமக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினை எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு டொலர்கள் தேவைப்படுவதேயாகும்.

டொலர்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கையின் பணம் தேவைப்படுகின்றது. எரிபொருள் கொள்வனவுக்கு எமக்கு தேவையான பணம் எங்களிடம் இல்லை

அத்துடன் எண்ணெய் தேவை சுமார் 40% குறைந்துள்ளது. அந்த கோரிக்கைக்கு ஏற்ற பணத்தை நாங்கள் வழங்குகிறோம். இதை மீண்டும் அதிகப்படுத்தினால் பணம் தேவை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் கோட்டா குறித்து வெளியான புதிய அறிவிப்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எரிபொருள் அளவை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ள போதிலும், அதற்கான அனுமதியை வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.நேற்று (புதன்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “தற்போது எமக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினை எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு டொலர்கள் தேவைப்படுவதேயாகும்.டொலர்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கையின் பணம் தேவைப்படுகின்றது. எரிபொருள் கொள்வனவுக்கு எமக்கு தேவையான பணம் எங்களிடம் இல்லைஅத்துடன் எண்ணெய் தேவை சுமார் 40% குறைந்துள்ளது. அந்த கோரிக்கைக்கு ஏற்ற பணத்தை நாங்கள் வழங்குகிறோம். இதை மீண்டும் அதிகப்படுத்தினால் பணம் தேவை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement