• Oct 05 2024

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு பதிலாக புதிய யோசனை! samugammedia

Chithra / Jul 23rd 2023, 7:39 am
image

Advertisement

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு பதிலாக தேசிய உயர்கல்வி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் உயர்கல்வி வாய்ப்புகளை இலகுபடுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இதற்கான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையை அந்த தெரிவுக்குழுவின் தலைவர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் 1995 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை ஆகியவற்றை மறுசீரமைத்து தேசிய உயர்கல்வி ஆணைக்குழுவை நிறுவுவதற்கு அந்தத் தெரிவுக்குழு பரிந்துரைத்துள்ளது.


பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு பதிலாக புதிய யோசனை samugammedia பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு பதிலாக தேசிய உயர்கல்வி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.நாட்டின் உயர்கல்வி வாய்ப்புகளை இலகுபடுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இதற்கான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.இது தொடர்பான அறிக்கையை அந்த தெரிவுக்குழுவின் தலைவர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் 1995 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை ஆகியவற்றை மறுசீரமைத்து தேசிய உயர்கல்வி ஆணைக்குழுவை நிறுவுவதற்கு அந்தத் தெரிவுக்குழு பரிந்துரைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement