விமான நிலையத்தை கடக்கும் போது கைரேகை மற்றும் புகைப்படங்களை எடுக்கும் திட்டம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சில் இடம்பெறும் செய்தியாளர் மாநாட்டில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன் விசா முறையை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாளம் காணும் புதிய சோதனைக் கருவி ஒன்று பொருத்தப்பட்டுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் வரும்போது அல்லது வெளியேறும்போது அவர்களை அடையாளம் காணும் வகையில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்தில் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் புதிய திட்டம். வெளியான அறிவிப்பு விமான நிலையத்தை கடக்கும் போது கைரேகை மற்றும் புகைப்படங்களை எடுக்கும் திட்டம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.பொது பாதுகாப்பு அமைச்சில் இடம்பெறும் செய்தியாளர் மாநாட்டில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.அத்துடன் விசா முறையை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாளம் காணும் புதிய சோதனைக் கருவி ஒன்று பொருத்தப்பட்டுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் வரும்போது அல்லது வெளியேறும்போது அவர்களை அடையாளம் காணும் வகையில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.