• Apr 01 2025

என்ட்ரி கொடுத்த புதிய வகை கொரோனா...! எதிர்கொள்ள நாம் தயார்...! சுகாதார அமைச்சு அறிவிப்பு...!samugammedia

Sharmi / Dec 26th 2023, 9:04 am
image

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது  வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் புதிய கொரோனாத் திரிபு விவகாரத்தைக் கையாள சுகாதார அமைச்சு  தயாராக உள்ளதாக மருத்துவ நிபுணர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில்  நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் மாதிரிகள் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், கொழும்பு மற்றும் கண்டி தேசிய மருத்துவமனை உட்பட 19 மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு அவை தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்  தெரிவித்தார்.

அதேவேளை, புதிய கொரோனாத் திரிபு இலங்கைக்குள் பிரவேசித்துள்ளபோதிலும், அது தொடர்பான மரபணுப் பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என சுகாதாரத்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.




என்ட்ரி கொடுத்த புதிய வகை கொரோனா. எதிர்கொள்ள நாம் தயார். சுகாதார அமைச்சு அறிவிப்பு.samugammedia இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது  வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில் புதிய கொரோனாத் திரிபு விவகாரத்தைக் கையாள சுகாதார அமைச்சு  தயாராக உள்ளதாக மருத்துவ நிபுணர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டில்  நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் மாதிரிகள் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், கொழும்பு மற்றும் கண்டி தேசிய மருத்துவமனை உட்பட 19 மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு அவை தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்  தெரிவித்தார்.அதேவேளை, புதிய கொரோனாத் திரிபு இலங்கைக்குள் பிரவேசித்துள்ளபோதிலும், அது தொடர்பான மரபணுப் பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என சுகாதாரத்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement