மாலபே, கஹந்தோட்டை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 11.02 கிலோ கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் 180 கிராம் ஹெரோயினுடனு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேக நபரிடமிருந்து 255,000 ரூபா பணம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் (PNB) அதிகாரிகளுக்கு நேற்று (22) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மல்வானை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதேநேரம், அவரை இன்று (23) கடுவலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (PNB) மேற்கொண்டு வருகிறது.
கஹந்தோட்டையில் 11.02 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருடன் ஒருவர் கைது மாலபே, கஹந்தோட்டை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 11.02 கிலோ கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் 180 கிராம் ஹெரோயினுடனு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும், சந்தேக நபரிடமிருந்து 255,000 ரூபா பணம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் (PNB) அதிகாரிகளுக்கு நேற்று (22) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மல்வானை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.அதேநேரம், அவரை இன்று (23) கடுவலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (PNB) மேற்கொண்டு வருகிறது.