• Nov 26 2024

கிளிநொச்சியில் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது...! பொலிஸார் அதிரடி...!samugammedia

Sharmi / Feb 15th 2024, 10:06 am
image

சட்ட விரோதமான முறையில் உள்ளூர் துப்பாக்கிகளை (இடியன்) மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு இடியன் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், மிருக வேட்டைக்கு பயன்படுத்தப்படும் கட்டுத் துவக்குக் குழாய்கள் 03, கட்டுத் துவக்குக்கு பயன்படுத்தப்படும் கம்பி, ஈயக்குண்டுகள் 12, யானை வெடிமருந்து 3 ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்றைய தினம்(14) சுற்றிவளைப்பு மேற்கொண்ட போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம்(15) கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது. பொலிஸார் அதிரடி.samugammedia சட்ட விரோதமான முறையில் உள்ளூர் துப்பாக்கிகளை (இடியன்) மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு இடியன் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது.அத்துடன், மிருக வேட்டைக்கு பயன்படுத்தப்படும் கட்டுத் துவக்குக் குழாய்கள் 03, கட்டுத் துவக்குக்கு பயன்படுத்தப்படும் கம்பி, ஈயக்குண்டுகள் 12, யானை வெடிமருந்து 3 ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்றைய தினம்(14) சுற்றிவளைப்பு மேற்கொண்ட போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம்(15) கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement