• Dec 04 2024

இராணுவத் தொண்டர் படையில் பணியாற்றிய நபர் சடலமாக மீட்பு..!

Sharmi / Oct 5th 2024, 12:55 pm
image

கொழும்பு புறக்கோட்டை அப்துல் காதர் மாவத்தை வீதியில் இன்று (05) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர், இராணுவத் தொண்டர் படையில் பணியாற்றியவர் என முதற்கட்ட காவல்துறை விசாரணைகளில் தெரியவந்ததுள்ளது. 

உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



இராணுவத் தொண்டர் படையில் பணியாற்றிய நபர் சடலமாக மீட்பு. கொழும்பு புறக்கோட்டை அப்துல் காதர் மாவத்தை வீதியில் இன்று (05) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவர், இராணுவத் தொண்டர் படையில் பணியாற்றியவர் என முதற்கட்ட காவல்துறை விசாரணைகளில் தெரியவந்ததுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement