• Nov 26 2025

தகவல் சேகரிக்கச் சென்ற பெண் ஊடகவியலாளரை அச்சுறுத்திய நபர்; வலுக்கும் கண்டனம்!

shanuja / Sep 22nd 2025, 9:38 pm
image

தகவல் சேகரிக்கச் சென்ற பெண் ஊடகவியலாளருக்கு நபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.  

 

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு முன்னால் சிவசேனை அமைப்பினராலே இன்று உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


குறித்த போராட்டப் பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பெண் ஊடகவியலாளருக்கு நபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.  


குறித்த பகுதியில் வாகனத்திலிருந்து இறங்கிய குறித்த நபர் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த  பெண் ஊடகவியலாளரிடம் அடாத்தாக பேசியுள்ளார். 


ஊடகவியலாளர்களால் தான் நாட்டிற்குப் பெரும் பிரச்சினை என்று அவரை வாய்க்கு வந்தபடி பேசியுள்ளார்.


இது தொடர்பான காணொளி வெளிவந்து பெண் ஊடகவியலாளர் என்றும் பார்க்கமால் அடாத்தாக நடந்துள்ளமைக்கு கண்டனங்கள் வலுப்பெற்று வருகின்றது.

தகவல் சேகரிக்கச் சென்ற பெண் ஊடகவியலாளரை அச்சுறுத்திய நபர்; வலுக்கும் கண்டனம் தகவல் சேகரிக்கச் சென்ற பெண் ஊடகவியலாளருக்கு நபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.   வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு முன்னால் சிவசேனை அமைப்பினராலே இன்று உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டப் பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பெண் ஊடகவியலாளருக்கு நபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.  குறித்த பகுதியில் வாகனத்திலிருந்து இறங்கிய குறித்த நபர் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த  பெண் ஊடகவியலாளரிடம் அடாத்தாக பேசியுள்ளார். ஊடகவியலாளர்களால் தான் நாட்டிற்குப் பெரும் பிரச்சினை என்று அவரை வாய்க்கு வந்தபடி பேசியுள்ளார்.இது தொடர்பான காணொளி வெளிவந்து பெண் ஊடகவியலாளர் என்றும் பார்க்கமால் அடாத்தாக நடந்துள்ளமைக்கு கண்டனங்கள் வலுப்பெற்று வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement