• Jul 15 2025

பழம் பறிக்கச் சென்ற நபர் சுட்டுக்கொலை; இலங்கையில் நடப்பது என்ன?

Chithra / Jul 15th 2025, 7:56 am
image


மீரிகமவில் அனுமதியின்றி காணி ஒன்றினுள் தூரியன் பழம் பறிக்கச் சென்ற நபர் துப்பாக்கிச் சூட்டில்   உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்த துப்பாக்கிச் சூடு, அந்த காணியின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

மீரிகமவின் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள துரியன் தோட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட காவலாளி மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

இந்நிலையில் இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அதில்  37 பேர் உயிரிழந்ததாகவும், 39 பேர் காயமடைந்துள்ளதாகவும்,   பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார். 

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 2025.01.01 முதல் 2025.07.13 வரை பதிவாகியுள்ளது.

பழம் பறிக்கச் சென்ற நபர் சுட்டுக்கொலை; இலங்கையில் நடப்பது என்ன மீரிகமவில் அனுமதியின்றி காணி ஒன்றினுள் தூரியன் பழம் பறிக்கச் சென்ற நபர் துப்பாக்கிச் சூட்டில்   உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.  இந்த துப்பாக்கிச் சூடு, அந்த காணியின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,மீரிகமவின் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள துரியன் தோட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட காவலாளி மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அதில்  37 பேர் உயிரிழந்ததாகவும், 39 பேர் காயமடைந்துள்ளதாகவும்,   பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 2025.01.01 முதல் 2025.07.13 வரை பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement