• Nov 23 2024

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் யாழில் கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு..!

Sharmi / Aug 22nd 2024, 1:16 pm
image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றையதினம்(21) இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. 

இதன்போது தலைமையுரையாற்றிய  தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன்,

ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்படும் உத்தியோகத்தர்கள் தேர்தல் சுமுகமாகவும், நீதியாகவும் நடைபெற  ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டதுடன், அந்த வகையில் கிராம அலுவலர்களின் பங்களிப்பும் காத்திரமானது எனத் தெரிவித்தார்.  

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களில்  கிராம அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ் இதன்போது விளக்கமளித்தார்

இச் செயலமர்வில், யாழ் மாவட்டத்தை பிரதிநிதிநித்துவப்படுத்தும் கிராமசேவகர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 


ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் யாழில் கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றையதினம்(21) இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. இதன்போது தலைமையுரையாற்றிய  தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன்,ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்படும் உத்தியோகத்தர்கள் தேர்தல் சுமுகமாகவும், நீதியாகவும் நடைபெற  ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டதுடன், அந்த வகையில் கிராம அலுவலர்களின் பங்களிப்பும் காத்திரமானது எனத் தெரிவித்தார்.  ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களில்  கிராம அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ் இதன்போது விளக்கமளித்தார்இச் செயலமர்வில், யாழ் மாவட்டத்தை பிரதிநிதிநித்துவப்படுத்தும் கிராமசேவகர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement