• Nov 28 2024

அஞ்சல் திணைக்களத்தின் வியாபாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற நிகழ்ச்சி திட்டப் பேரணி..!samugammedia

Tharun / Mar 2nd 2024, 7:24 pm
image

அஞ்சல் திணைக்களத்தின் புதிய நடைமுறையின்படி வியாபாரத்தை  மேம்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் ஒன்று கல்முனை நகரை மையப்படுத்தி  கல்முனை பிரதம அஞ்சல் அதிபர்   யூ.எல்.எம். பைஸர் தலைமையில் இன்று(02) நடைபெற்றது.


இந்நிகழ்ச்சித்  திட்டமானது   அஞ்சல்மா அதிபரின் எண்ணக்கருவின் அடிப்படையில் கிழக்கு மாகாண அஞ்சல்மா  அதிபதி எம்.எச்.எம். அஸ்லம் வழிகாட்டலில் அக்கரைப்பற்று அம்பாறை பிராந்திய  அஞ்சல் அத்தியட்சகர்   கே.பி.எஸ்.பியந்தவின் பங்கேற்புடன் கல்முனை அஞ்சல் அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகி தரவைப்பிள்ளையார் கோவில் அருகில் சென்று மீண்டும் கல்முனை பிரதம அஞ்சலை பேரணி வந்தடைந்தது.


குறித்த பேரணியில் அஞ்சல் திணைக்களத்தின் புதிதாக  நடைமுறைப்படும் திட்டங்களான  CASH ON DELIVERY SERVICE, EMS, SL POST COURIER SERVICE உள்ளிட்ட சேவைகள்  தொடர்பாக விழிப்பூட்டல்களை துண்டுப்பிரசுரம் மூலம்   நகரப்பகுதி வர்த்தக நிலையங்கள், பொதுமக்கள் இடையே விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.


குறித்த பேரணியில் அக்கரைப்பற்று அம்பாறை பிராந்திய  அஞ்சல் அத்தியட்சகர்   கே.பி.எஸ்.பியந்த, கல்முனை பிரதம அஞ்சல் அதிபர்   யூ.எல்எம்.பைஸர் உட்பட   அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்களும் பங்கேற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.


அஞ்சல் திணைக்களத்தின் வியாபாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற நிகழ்ச்சி திட்டப் பேரணி.samugammedia அஞ்சல் திணைக்களத்தின் புதிய நடைமுறையின்படி வியாபாரத்தை  மேம்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் ஒன்று கல்முனை நகரை மையப்படுத்தி  கல்முனை பிரதம அஞ்சல் அதிபர்   யூ.எல்.எம். பைஸர் தலைமையில் இன்று(02) நடைபெற்றது.இந்நிகழ்ச்சித்  திட்டமானது   அஞ்சல்மா அதிபரின் எண்ணக்கருவின் அடிப்படையில் கிழக்கு மாகாண அஞ்சல்மா  அதிபதி எம்.எச்.எம். அஸ்லம் வழிகாட்டலில் அக்கரைப்பற்று அம்பாறை பிராந்திய  அஞ்சல் அத்தியட்சகர்   கே.பி.எஸ்.பியந்தவின் பங்கேற்புடன் கல்முனை அஞ்சல் அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகி தரவைப்பிள்ளையார் கோவில் அருகில் சென்று மீண்டும் கல்முனை பிரதம அஞ்சலை பேரணி வந்தடைந்தது.குறித்த பேரணியில் அஞ்சல் திணைக்களத்தின் புதிதாக  நடைமுறைப்படும் திட்டங்களான  CASH ON DELIVERY SERVICE, EMS, SL POST COURIER SERVICE உள்ளிட்ட சேவைகள்  தொடர்பாக விழிப்பூட்டல்களை துண்டுப்பிரசுரம் மூலம்   நகரப்பகுதி வர்த்தக நிலையங்கள், பொதுமக்கள் இடையே விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.குறித்த பேரணியில் அக்கரைப்பற்று அம்பாறை பிராந்திய  அஞ்சல் அத்தியட்சகர்   கே.பி.எஸ்.பியந்த, கல்முனை பிரதம அஞ்சல் அதிபர்   யூ.எல்எம்.பைஸர் உட்பட   அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்களும் பங்கேற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement