• May 20 2024

பாடசாலைகளில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள வேலைத்திட்டம்..! - அமைச்சரின் அறிவிப்பு samugammedia

Chithra / May 22nd 2023, 9:11 pm
image

Advertisement

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பாழடைந்த கட்டிடங்களை புனரமைக்கும் அவசர வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மாகாண கல்வி செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், பாடசாலைகளின் பெறுபேறுகளை தொடர்ச்சியாக ஆராயும் முறைமை ஒன்றை அமைக்கவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

நேற்று (21) நடைபெற்ற மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேசங்களின் கல்விக் கட்டமைப்புக் குழுக்களில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:


தற்போது பாடசாலைகளில் அரைகுறையாக கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்கள் ஏராளம். எங்களுக்கு பொருளாதார பலம் அதிகம் இல்லை. எனவே இவற்றை கட்டி முடிக்க ஏற்பாடு இல்லை. இவை முன்பு தொடங்கப்பட்ட கட்டுமானங்கள்.

நான் மாகாணசபையில் இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட “எங்கள் பாடசாலையை – நம் கைகளால் காப்பாற்றுவோம்” என்ற செயற்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்போம்.- என்றார்.


 

பாடசாலைகளில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள வேலைத்திட்டம். - அமைச்சரின் அறிவிப்பு samugammedia மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பாழடைந்த கட்டிடங்களை புனரமைக்கும் அவசர வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மாகாண கல்வி செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.அத்துடன், பாடசாலைகளின் பெறுபேறுகளை தொடர்ச்சியாக ஆராயும் முறைமை ஒன்றை அமைக்கவும் அமைச்சர் வலியுறுத்தினார்.நேற்று (21) நடைபெற்ற மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேசங்களின் கல்விக் கட்டமைப்புக் குழுக்களில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:தற்போது பாடசாலைகளில் அரைகுறையாக கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்கள் ஏராளம். எங்களுக்கு பொருளாதார பலம் அதிகம் இல்லை. எனவே இவற்றை கட்டி முடிக்க ஏற்பாடு இல்லை. இவை முன்பு தொடங்கப்பட்ட கட்டுமானங்கள்.நான் மாகாணசபையில் இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட “எங்கள் பாடசாலையை – நம் கைகளால் காப்பாற்றுவோம்” என்ற செயற்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்போம்.- என்றார். 

Advertisement

Advertisement

Advertisement