அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மன்னார் நகரக் கிளையின் ஏற்பாட்டில் இனங்களுக்கிடையே சகவாழ்வை கட்டியெழுப்பும் செயல் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக கிறிஸ்தவ மதத்தலைவரை சந்திக்கும் நிகழ்வு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா மன்னார் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேஹ் அஸீம் (அத்லி) அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வின் முதல் சந்திப்பாக மன்னார் தோட்டவெளி பங்குத்தந்தையும் மன்னார் மறைக்கோட்ட முதல்வருமான அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார் அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மன்னார் நகரக் கிளையின் செயற்குழு உறுப்பினர்களுக்குமிடையில் இச்சிநேக பூர்வ சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதன் போது மன்னார் நகரத்திற்குள் இன நல்லுறவை மேம்படுத்தல் சம்பந்தமான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன தொடர்சியாக மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக மாவட்ட ரீதியாக பல்வேறு சந்திப்புக்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இனங்களுக்கு இடையே சகவாழ்வை கட்டியெழுப்பும் செயல்திட்டம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மன்னார் நகரக் கிளையின் ஏற்பாட்டில் இனங்களுக்கிடையே சகவாழ்வை கட்டியெழுப்பும் செயல் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக கிறிஸ்தவ மதத்தலைவரை சந்திக்கும் நிகழ்வு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா மன்னார் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேஹ் அஸீம் (அத்லி) அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வின் முதல் சந்திப்பாக மன்னார் தோட்டவெளி பங்குத்தந்தையும் மன்னார் மறைக்கோட்ட முதல்வருமான அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார் அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மன்னார் நகரக் கிளையின் செயற்குழு உறுப்பினர்களுக்குமிடையில் இச்சிநேக பூர்வ சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன் போது மன்னார் நகரத்திற்குள் இன நல்லுறவை மேம்படுத்தல் சம்பந்தமான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன தொடர்சியாக மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக மாவட்ட ரீதியாக பல்வேறு சந்திப்புக்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.