• May 21 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் முல்லைத்தீவுக்கு திடீர் விஜயம்! samugammedia

Tamil nila / Aug 27th 2023, 8:25 pm
image

Advertisement

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க இன்றையதினம் (27) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார்.



முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தின் போது புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் செபஸ்தியார் தேவாலயத்தில் சென்று அங்கு மக்களுடன் கலந்துரையாடலின் பின்னர் ஒட்டுசுட்டான் தான்தோன்றிஸ்வரம் ஆலயம், ஹிஜ்ராபுரம் முகைதீன் ஜும்மா பள்ளிவாசல், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் விஜயத்தை மேற்கொண்டதன் பின்னர் இறுதியாக முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




விஜயத்தின் போது முல்லைத்தீவு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளர் லக்சயன் முத்துக்குமாரசாமி, உதவி அமைப்பாளர் எஸ். சத்தியசுதர்சன், வவுனியா மாவட்ட இணை அமைப்பாளர் ரசிக்கா பிரியதர்சனி போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் முல்லைத்தீவுக்கு திடீர் விஜயம் samugammedia ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க இன்றையதினம் (27) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார்.முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தின் போது புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் செபஸ்தியார் தேவாலயத்தில் சென்று அங்கு மக்களுடன் கலந்துரையாடலின் பின்னர் ஒட்டுசுட்டான் தான்தோன்றிஸ்வரம் ஆலயம், ஹிஜ்ராபுரம் முகைதீன் ஜும்மா பள்ளிவாசல், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் விஜயத்தை மேற்கொண்டதன் பின்னர் இறுதியாக முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.விஜயத்தின் போது முல்லைத்தீவு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளர் லக்சயன் முத்துக்குமாரசாமி, உதவி அமைப்பாளர் எஸ். சத்தியசுதர்சன், வவுனியா மாவட்ட இணை அமைப்பாளர் ரசிக்கா பிரியதர்சனி போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement